கொரிய தீப கற்பகத்தில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை நடத்தி வருகிறது.
வட கொரியா இன்று காலை 5.27 மணிக்கு மீண்டும் புதிய ஏவுகணை சோதனை நடத்தியது. இச்சோதனை வட மேற்கு பியாங்யாங்கில் உள்ள குசாங் பகுதியில் இருந்து நடத்தப்பட்டது
அங்கிருந்து ஏவப்பட்ட ஏவுகணை 2 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பாய்ந்து சென்று ஜப்பான் கடலில் விழுந்தது. புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது பற்றி வடகொரியா எந்தவித தகவலும் வெளியிடவில்லை.
இதற்கு முன்பு 2 வாரத்துக்கு முன்பு வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. அது தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.