நியூடெல்லி: தமிழகத்தில் இருந்து திருடுபோன பழங்கால சிலை லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பழமையான கோவில்களில் கலை நயம்மிக்க நேர்த்தியான பழமையான விலை மதிப்பற்ற கற்சிலைகளும், உலோகச் சிலைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. கடந்த காலங்களில் தமிழக கோவில்களிலிருந்து விலை மதிப்பற்ற சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கலைப் பொருள் வியாபாரிகளுக்கும் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்டன. தமிழகத்தின் ஆன்மீக மற்றும் கலைப் பொக்கிஷங்கள் கடத்தல் குறித்து கடந்த காலங்களில் இதுகுறித்து குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வழக்குகளை விசாரிக்கும் சிலை தடுப்பு பிரிவினரின் புலன் விசாரணை தீவிரமாக உள்ள நிலையில், கடத்தப்பட்ட சிலைகளில் பல வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களிலும் கலைப் பொருள் சேகரிப்பாளர்களிடமும் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தமிழக கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழகத்தில் இருந்து மாயமான சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்பதற்கான முயற்சிகளை போலீசார் எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினும், டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு உத்தரவிட்டிருந்தனர். முதல்வரின் இந்த உத்தரவையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி திருடுபோன சிலைகளை மீட்பதற்காகவே தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.
தமிழகத்தின் கோயில்களில் இருந்து திருடுபோன பல சிலைகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களிலும், கலைப்பொருள் சேகரிப்பாளர்களிடமும் இருப்பது தெரியவரும் பட்சத்தில், உடனே இந்த சிலைகள் எல்லாம் நம்முடைய கோவில்களில் இருந்து திருடப்பட்டவைதான் என்பதை நிரூபிக்க சட்டப்படியான சாட்சியங்கள் தடயங்கள் சேகரிக்கப்படும்.
மேலும் படிக்க | தடயத்தை அழிக்க திருடன் செய்த காரியத்தை பாருங்கள் -சிசிடிவி காட்சி
சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், தமிழக அரசு மூலம் நம் சிலைகள் உள்ள அந்தந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு. இறுதியில் அந்த சிலைகள் எல்லாம் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது நிரூபிக்கப்படும். அப்படி நிரூபிக்க்கப்பட்ட சிலைகளை அந்தந்த நாடுகளில் இருந்து மீட்டு வர நடவடிக்கையும் எடுக்கப்பட்டு பல்வேறு சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக 1929 ஆம் ஆண்டு ஹாகோப் கெவோர்கியன் என்பவரால் திருடப்பட்டு வாஷிங்டன் டிசியில் உள்ள ஃப்ரீயர் அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்ட செம்பியன் மகாதேவி சிலையை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தின் வளமான கலைப் பொக்கிஷங்களின் மதிப்பை அறிந்து அவற்றை மிகவும் அதிக விலை கொடுத்து வங்க வெளிநாட்டவர் தயாராக இருப்பதால், சிலைக் கடத்தல் என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.
மேலும் படிக்க: சிசிடிவி கேமராவை துணியால் மறைத்து பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ