காவல்துறை, நீதித்துறை மற்றும் பிற அரசு நிறுவனங்களை அச்சுறுத்தியதற்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று, இஸ்லாமாபாத்தின் F-9 பூங்காவில் நடந்த பேரணியின் போது மூத்த போலீஸ் அதிகாரிகள், ஒரு பெண் நீதிபதி, அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை இம்ரான் பகிரங்கமாக மிரட்டினார். இதனை அடுத்து, இம்ரான் கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டம் பிரிவு 7-ன் கீழ் இஸ்லாமாபாத்தில் உள்ள மார்கல்லா காவல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இம்ரானின் பேச்சு காவல்துறை, நீதிபதிகள் மற்றும் நாட்டில் அச்சம் மற்றும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் பிரதமர், மூத்த போலீஸ் அதிகாரிகள், ஒரு பெண் மாஜிஸ்திரேட், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் எதிரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
முன்னதாக, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது அரசு நிறுவனங்களை அச்சுறுத்தியதற்காகவும், பேரணியில் பொதுமக்களை தூண்டும் வகையிலான அறிக்கைகளை வெளியிட்டதற்காகவும் வழக்கு பதிவு செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சித் தலைவர் தனது உரைகளில் ராணுவம் மற்றும் பிற அரசு அமைப்புகளை தாக்கிப் பேசுகிறார் என்று சனாவுல்லா குற்றம் சாட்டினார். இம்ரானின் புதிய பேச்சு குறித்து உள்துறை அமைச்சகம் அறிக்கை தயாரித்துள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன் அட்வகேட் ஜெனரல் மற்றும் சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | பயங்கரவாதிகளை காப்பாற்றும் சீனா - பாகிஸ்தான்; ஐநாவில் இந்தியா காட்டம்
அனைத்து செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களிலும், இம்ரான் உரையை நேரடியாக ஒளிபரப்ப பாகிஸ்தான் ஊடக கண்காணிப்பு அமைப்பு தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ஒழுங்குமுறை ஆணையம் (பெம்ரா) சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பலமுறை எச்சரித்தாலும் அரசுக்கு எதிரான பேச்சுக்களை ஒளிபரப்புவதைத் தொலைக்காட்சி சேனல்கள் நிறுத்தத் தவறிவிட்டதாகக் கூறியது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கான் தனது உரைகளில் அரசு நிறுவனங்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருவது, அமைதிக்கு குந்தகம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என அரசு கூறுகிறது.
அதே நேரத்தில், இம்ரான் கான் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கு கடுமையாக பதிலளித்துள்ள பிடிஐ, பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் அரசாங்கம் ஒரு பாசிச அரசாங்கம் என்று கூறியது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ராவல்பிண்டியில் உள்ள லியாகத் பாக் மைதானத்தில் நடந்த பேரணியில் இம்ரான் கான் பேசினார். கடந்த வாரம் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனது கட்சியைச் சேர்ந்த ஷாபாஸ் கில் தவறாக நடத்தப்படுகிறார் என எச்சரிக்கையை இம்ரான் கான் விடுத்திருந்தார்.
மேலும் படிக்க | திவால் நிலையில் பாகிஸ்தான்... அரசு சொத்துக்களை விற்க முடிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ