பாகிஸ்தானை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற அரசின் சொத்துக்கள் விற்கப்படும் என அந்நாட்டு அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் பணப்பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் தனது தேசிய சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், நாட்டில் பண வீக்கம் மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுக் கடன் உச்ச நிலையை எட்டியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க, ஷாபாஸ் ஷெரீப் அரசு, நாட்டின் தேசிய சொத்துக்களை மட்டும் விற்க முடிவு செய்துள்ளது. தேசிய சொத்துக்களை விற்று வெளிநாட்டு கடனை அடைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அவசரச் சட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திவாலாகும் நிலையில் பாகிஸ்தான்
அரசின் இந்த முடிவு பாகிஸ்தான் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. கடனைக் அடைக்கும் வகையில் அரசாங்க சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திவால்நிலையை தவிர்க்கவே அரசு இவ்வாறு செய்வதாக ஊடகங்களில் பேசப்படுகிறது.
மேலும் படிக்க | இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்
இது தொடர்பான செய்தி பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையான தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனில் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சரவை அரசுகளுக்கிடையேயான வணிகப் பரிமாற்ற ஆணை-2022க்கு ஒப்புதல் அளித்துள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கான அனைத்து ஆயத்தங்களையும் பாகிஸ்தான் அரசு முடித்துவிட்டதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு கடனை அடைப்பதற்காக சொத்துக்களை விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மேலும் கடன் கொடுக்க மறுத்ததாக செய்தி வந்தது நினைவில் இருக்கலாம். பழைய கடனை திருப்பிச் செலுத்தும் வரை பாகிஸ்தானுக்கு அதிக பணம் கிடைக்காது என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கடனை அடைக்க பாகிஸ்தான் அரசாங்கம் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு நிறுவனங்களை 2 முதல் 2.5 பில்லியன் டாலர்களுக்கு விற்கப் போகிறது என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் பழைய கடனை திருப்பிச் செலுத்துவதன் மூலம் திவாலாவதைத் தவிர்க்க முடியும் என நம்பிக்கை வைத்துள்ளது.
மேலும் படிக்க | கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்... கை விரித்த சீனா...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ