ஒபாமாவால் என்னை வெல்ல முடியாது என்று டொனால்டு கூறியுள்ளார்.
டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒபாமாவால் என்னை வெல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
பேட்டி ஒன்றில் ஒபாமா கூறியதாவது:-
மக்கள் என்மேல் நம்பிக்கை வைத்துள்ளனர். என்னை ஆதரிக்கின்றன. மக்கள் மாற்றங்களை விரும்புகின்றன. நான் அதிபர் தேர்தல் களத்தில் இருந்திருந்தால் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருக்க மாட்டார் என கூறியிருந்தார்.
இதற்கு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
ஒபாமாவால் என்னை வீழ்த்த முடியாது என பதில் கூறியுள்ளார்.
President Obama said that he thinks he would have won against me. He should say that but I say NO WAY! - jobs leaving, ISIS, OCare, etc.
— Donald J. Trump (@realDonaldTrump) December 26, 2016
கடந்த நாட்களில் நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் போட்டியிட்டனர். ஹிலாரி கிளிண்டன் ஆதரித்து ஒபாமா பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.