COVID நோயாளியின் எச்சிலை கலந்து முதலாளியை கொல்ல சதி, பகீர் தகவல்!

முதலாளி குடிக்கும் பானத்தில் கொரோனா வைரஸ் நோயாளியின் எச்சிலை கலந்த ஊழியர் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ..

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 11, 2021, 10:33 AM IST
  • COVID நோயாளியின் எச்சிலை கலந்து முதலாளியை கொல்ல சதி
  • பணத்தை திருடி விட்டு தலைமறைவானார் ஊழியர்
  • வைரஸால் கொல்ல முடியாவிட்டால், கத்தியால் குத்தி கொலை செய்வதாக மிரட்டல் செய்தி
COVID நோயாளியின் எச்சிலை கலந்து முதலாளியை கொல்ல சதி, பகீர் தகவல்! title=

தனக்கு சோறு போடும் முதலாளி குடிக்கும் பானத்தில் கொரோனா வைரஸ் நோயாளியின் எச்சிலை கலந்த ஊழியர் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பணியாளர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் துருக்கி நாட்டில் நடைபெற்றது. விசித்திரமான இந்த செயலை செய்த ஊழியர் மீது கார் டீலர் Ibrahim Unverdi போலீசில் புகார் அளித்தார்.

துருக்கிய நகரமான அதானாவில் உள்ள கார் டீலர் இப்ராஹிம் அன்வெர்டி (Ibrahim Unverdi), தன்னையும் அவரது மனைவியையும் கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டுகிறார். அதுமட்டுமல்ல, தன்னிடம் இருந்து கிட்டத்தட்ட 30,000 டாலர்கள் பணத்தையும்  திருடியதாகவும் தனது ஊழியர் ரமழான் சிமென் (Ramazan Cimen) மீது இப்ராஹிம் புகார் அளித்துள்ளார்.  

ஒரு கார் விற்பனை தொடர்பாக ஊழியர் சிமெனுக்கு பணம் கொடுத்தார் முதலாளி. முதலாளியின் உத்தரவுப்படி, காரை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லாமல், பணத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

நேரம் கடந்த பின்னரும் ரமழான் சிமென் (Ramazan Cimen) வரவில்லை என்ற நிலையில் பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனால் முதலில் போனை எடுக்காத சிமென், இறுதியில் கடன் சுமை அதிகமாக இருப்பதால், திருப்பிச் செலுத்த பணம் தேவை என்று கூறினார்.

இந்த விவகாரம் பற்றி தன்னுடைய ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடுக்கிடும் தகவல் முதலாளிக்கு தெரியவந்தது. சிமென் கொரோனா வைரஸ் நோயாளி ஒருவரின் உமிழ்நீரை $ 50 க்கு வாங்கியதாகவும், அதை முதலாளி Unverdi குடிக்கும் பானத்தில் கலக்க முயன்றதாகவும் தெரியவந்திருக்கிறது.

இதுபற்றி புகாரளித்த Unverdi, “இது போன்ற ஒரு வினோதமான கொலை நுட்பத்தை நான் கேள்விப்படுவது இதுவே முதல் முறை. எனக்கு மருத்துவரீதியான சிக்கல்கள் எதுவும் ஏற்படவில்லை. கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். கடவுள் எப்போதும் நல்லவர்களுடன் இருக்கிறார்” என்று சொல்கிறார்.

முதலாளி அன்வெர்டிக்கு மிரட்டல் செய்திகளையும் அனுப்பிய ஊழியர் சிமென், '' வைரஸால் உன்னை என்னால் கொல்ல முடியவில்லை. அடுத்த முறை உன்னை தலையில் சுட்டுக்கொள்வேன்" என்றும் தெரிவித்திருக்கிறார்.

உன்வெர்டி இது தொடர்பாக புகார் அளித்ததுடன், சிமெனுக்கு எதிராக சாட்சியங்களையும் சமர்ப்பித்தார். எனவே அவருக்கும், அவரது மனைவிக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Also Read | Road Safety World Series T20: சச்சின் முதல் கவாஸ்கர் வரை கிரிக்கெட் ஜாம்பவான்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News