மரியம் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு பெற்ற சன்னி இத்தேஹாத் கவுன்சிலின் ராணா அஃப்தாப்பை தோற்கடித்து மரியம் நவாஸ் வெற்றி பெற்று, முதலமைச்சராக வாகை சூடியுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 12 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (Pakistan Muslim League-Nawaz (PML-N)) கட்சியின் துணைத் தலைவர் மரியம் தேர்ந்தெடுக்கப்படும்போது, சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) ஆதரவு பெற்ற சன்னி இத்தெஹாத் கவுன்சிலின் (SIC) தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சர்
முதலமைச்சர் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக, தனது தாய் குல்சூம் நவாஸின் கல்லறைக்குச் சென்று மரியாதை செய்துவிட்டு சட்டசபைக்கு சென்றார். அதுமட்டுமல்ல, தனது தாத்தா பாட்டியின் கல்லறைகளுக்கு சென்ற பிறகு, சட்டமன்றத்திற்கு சென்ற மரியம், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் படிக்க | தேர்தலில் தவறு நடந்தது உண்மை! தவறை ஒப்புக் கொண்டு பதவி விலகிய பாகிஸ்தான் உயரதிகாரி
'நமது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு பெண் பஞ்சாப் முதல்வராகிறார்’ என்று PMLN கட்சி எக்ஸ் வலைதளத்தில் செய்தி வெளியிட்டது.
" وزیراعلیٰ پنجاب مریم نوازشریف کا نگہبان رمضان پیکج کی گھر تک فراہمی کا اعلان"
"مریم نوازشریف کا شاندار اقدام ، خواتین کو فری ٹرانسپورٹ دینے کا اعلان" pic.twitter.com/YLZagRhZJB
— PMLN (@pmln_org) February 26, 2024
பதவியேற்பு விழா
பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழாவில், மொத்தம் 371 உறுப்பினர்களில் 321 பேர் பதவியேற்றனர். முன்னதாக பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல்களில் PMLN வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
PMLN கட்சியின் மாலிக் முஹம்மது அஹமத் கான் 224 வாக்குகள் பெற்று பொதுஜன முன்னணியின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். துணை சபாநாயகருக்கான தேர்தலில் PMLN வேட்பாளர் மாலிக் ஜாகீர் அகமது சன்னார் வெற்றிபெற்றார். அவர், SIC இன் முகமது மொய்னுதீனை 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேலும் படிக்க | NEPAL: நேபாளத்தை சுத்திப் பார்க்க போலாமா? பேக்கேஜ் விலையும் குறைவு வசதிகளும் அதிகம்!
மரியம் நவாஸ் குடும்பம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ். தற்போது 50 வயதாகும் மரியம், 1992 இல் சஃப்தர் அவான் என்பவரை மணந்தார். பாகிஸ்தான் ராணுவத்தில் கேப்டனாக இருந்த சஃப்தர், நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த காலத்தில் அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாகவும் பணிபுரிந்தவர். மரியம்-சஃப்தர் தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
2012ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த மரியம், 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2013-ம் ஆண்டு பிரதமரின் இளைஞர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டலும், அதுதொடர்பான சர்ச்சைகளால், மரியம் பதவி விலகிவிட்டார்.
2024 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் போது, அவர் முதன்முறையாக பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றத்திற்கும் (NA) பஞ்சாபின் மாகாண சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்கறீங்களா... ‘இந்த’ கட்டணங்கள் குறித்து எச்சரிக்கையா இருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ