10 வயது சிறுவனுக்கும், 8 வயது பெண் குழந்தைக்கும் இடையே நடந்த திருமணம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது.
திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்றும் கூறலாம். தற்போது உள்ள அனைவரும் தனகளது விருப்பத்திற்கு ஏற்றார்போல் திருமணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு இடையே திருமணம் நடந்துள்ளது.
உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைத் திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில், ருமேனியாவில் நடந்த குழந்தைகளுக்கு இடையேயான திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கிரையோவா (Craiova) என்ற இடத்தைச் சேர்ந்த நாடோடிக் கும்பலைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கும், 8 வயது பெண் குழந்தைக்கும் திருமணம் நடைபெற்றது.
முன்னதாக முழு அலங்காரத்தில் இருந்த இருகுழந்தைகளும் தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமல் திகைத்து நின்றனர். அப்போது பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தையிடம் பொம்மை பறிக்கப்பட்டதால் அந்தக் குழந்தை அழுதது. குழந்தைகள் திருமணம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளதால் குழந்தைகளின் பெற்றோர்களை கைது செய்ய கிரையோவா நகர போலீசார் முடிவு செய்துள்ளனர்.