சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 811 பேர் உயிரிழந்துள்ளனர் என சீன அரசு தகவல்!!
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 811 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வந்தாலும், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. சீனாவில் இதுவரை 34 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலில் 774 பேரைக் கொன்றது. சார்ஸ் வைரசால் பலியானோர் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா மட்டுமின்றி, தென்கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் உள்ளது. எனவே, சீனாவில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்கு பின்னரே தங்களது நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சீனா செல்ல அமெரிக்க உள்ளிட்ட 72 நாடுகள் பொதுமக்களுக்கு தடைவிதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவிலிருந்து வைரஸ் தோற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை "உறுதிப்படுத்துகிறது" - ஆனால் வைரஸ் உச்சம் அடைந்துவிட்டதா என்று சொல்வது மிக விரைவில் என்று எச்சரித்தார். WHO இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் ஒரு செய்திக்குறிப்பில், துல்லியமான தகவல்களை அணுகுவது உயிர்களை காப்பாற்ற உதவும் என்று வலியுறுத்துவதை விட உண்மைகள் மிக முக்கியமானவை என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்; "2019nCoV வைரஸ் பரவுகையில், தவறான தகவல் நமது வீர சுகாதார ஊழியர்களின் வேலையை இன்னும் கடினமாக்குகிறது. இது முடிவெடுப்பவர்களின் கவனத்தை திசை திருப்புகிறது. மேலும் இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது மற்றும் பொது மக்களுக்கு அச்சத்தை பரப்புகிறது" என்று அவர் கூறினார்.