August 15: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்

உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,11,73,009; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 765,029; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,32,87,261

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2020, 11:46 PM IST
  • உலகளவில் கொரோனா பாதிகப்பு எண்ணிக்கை: 2,11,73,009
  • உலகளவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை: 765,029
  • உலகளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,32,87,261
August 15: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம் title=

புதுடெல்லி: உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,11,73,009; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 765,029; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,32,87,261
இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,26,192 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 18,08,936 ஆகவும், பலி எண்ணிக்கை 49,036 ஆகவும் உயர்ந்துவிட்டது.
தென் கொரியாவில் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, தலைநகர் சியோலில் கடுமையான சமூக விலகல் கட்டுப்பாடுகள் அமல்...
இங்கிலாந்து: கட்டுப்பாடுகள் தளர்வு செய்ததைத் தொடர்ந்து, திரையரங்குகள் மீண்டும் திறப்பு, மேலும் குறிப்பிட்ட சில இடங்களில் நடைபெறும் விளையாட்டுக்களுக்கு மட்டும் ரசிகர்கள் அனுமதி...
தென்னாப்பிரிக்கா: ஊரடங்குக் கட்டுப்பாடுகளின் போது குற்றச்சம்பவங்கள் 40% வரை குறைந்தது...

Read Also | கொரோனா காலத்தில் புகைப்பிடித்தால் நீரிழிவு - இரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவு ஏற்படலாம்

வெளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும். மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்: 1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477...

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:
1. அமெரிக்கா - 53,13,055
2. பிரேசில் - 32,26,443 
3. இந்தியா - 25,25,922
4. ரஷ்யா - 9,10,778
5. தென்னாப்பிரிக்கா - 5,79,140 
6. பெரு - 5,16,296 
7. மெக்சிகோ - 5,11,369
8. கொலம்பியா - 4,45,111
 9. சிலி - 3,82,111
10. ஸ்பெயின் - 3,42,813

Trending News