மனிதர்களை காவு வாங்கி வரும் கொரோனா வைரஸ் குறித்து, கடந்த 1981-ல் வெளியிடப்பட்ட “The Eyes of Darkness” என்ற நாவலில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் தற்போது சீனாவுக்கு வெளியேயும் வேகமாக பரவி வருகிறது. சீனா மற்றும் வெளிநாடுகள் என 69 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கடைசியாக வெளியான தகவல்படி 1,800 பேர் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர்.
கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று சீனா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸை போலவே, ஒரு உயிர்கொல்லி வைரஸ் குறித்து The Eyes of Darkness என்ற கற்பனை கலந்த த்ரில்லர் நாவலில் சுமார் 39 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டிருக்கிறது. தற்போது அந்த நாவலில் கூறப்பட்டதை போலவே தான் நிஜத்தில் நிகழ்ந்து வருவதாக சமூக வலைத்தளவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Is Coranavirus a biological Weapon developed by the Chinese called Wuhan -400? This book was published in 1981. Do read the excerpt. pic.twitter.com/Qdep1rczBe
— Manish Tewari (@ManishTewari) February 16, 2020
அந்த நாவலை எழுதியவர் டீன் கூன்ட்ஸ் (Dean Koontz) என்ற அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் ஆவார். Eyes of Darkness நாவலில், சீன ராணுவ ஆய்வகத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. ஊகானில் அமைக்கப்பட்டுள்ள அந்த ராணுவ ஆய்வகம், போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்த புதிய வைரஸ் தயாரிப்பு ஒன்றில் ஈடுபடுவதாகவும், இறுதியாக கொடூர வைரஸ் ஒன்று உருவாக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. அந்த உயிர்கொல்லி வைரசுக்கு wuhan 400 என்றும் நாவலில் பெயரிடப்பட்டு கதை தொடர்கிறது.
இந்நிலையில் மனிதர்களை காவு வாங்கி வரும் கொரோனா வைரஸ் குறித்து, கடந்த 1981-ல் வெளியிடப்பட்ட “The Eyes of Darkness” என்ற திகில் நாவலில் கூறப்பட்டுள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.