Diego Maradonaவின் மரணம் கவனக்குறைவா? மருத்துவரிடம் காவல்துறை விசாரணை

அர்ஜென்டினா காவல்துறையினர் டாக்டர் லியோபோல்டோ லூக்கின் மருத்துவமனையில் சோதனை நடத்தியுள்ளனர். டியாகோ மரடோனாவின் மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க கோப்புகளை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Dec 1, 2020, 04:20 PM IST
  • Maradonaவின் மரணம் கவனக்குறைவா? மருத்துவரிடம் காவல்துறை விசாரணை
  • மரடோனாவின் மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க கோப்புகள் சேகரிக்கப்படுகின்றன
Diego Maradonaவின் மரணம் கவனக்குறைவா? மருத்துவரிடம் காவல்துறை விசாரணை title=

அர்ஜென்டினா காவல்துறையினர் டாக்டர் லியோபோல்டோ லூக்கின் மருத்துவமனையில் சோதனை நடத்தியுள்ளனர். டியாகோ மரடோனாவின் மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க கோப்புகளை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  
டியாகோ மரடோனா 60 வயதில் மாரடைப்பால் இறந்தார். டியாகோ மரடோனாவின் மரணத்திற்கு முந்தைய வாரங்களில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக ள் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

அர்ஜென்டினா காவல்துறையினர் மருத்துவர் லியோபோல்டோ லூக்-இன் (Leopoldo Luque) மருத்துவமனையில் சோதனை நடத்தியுள்ளனர். டியாகோ மரடோனாவின் மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க கோப்புகளை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

Also Read | Football: கால்பந்து ஜாம்பவான் மரடோனா மாரடைப்பால் மரணம்

உலகப் புகழ் பெற்ற மரடோனாவுக்கு மூளையில் இருந்து ரத்த உறைவை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வந்தார் மரடோனா. ஆனால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் இறந்துபோனார்.

"சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், மருத்துவர் லியோபோல்டோ லூக்கின் (Leopoldo Luque) வீடு மற்றும் அலுவலகத்தில் தேடுதல் நட்ததப்படுவது அவசியம் என்று நினைக்கிறோம்" என்று அரசு வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்து வெளிவந்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு பிறகு மரடோனா வீட்டில் இருந்தே மருத்துவ கண்காணிப்பில் இருப்பது என்ற முடிவு மரடோனாவுடையது தான் என்று அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவம் கூறுகிறார்.

"மருத்துவர்கள், அவருடைய குடும்பத்தினர் என நாங்கள் அனைவரும் டியாகோ மரடோனாவுக்கு சிறந்த சிகிச்சையை கொடுத்தோம்.  ஆனால் அவரது விருப்பம் இல்லாமல் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை”என்று டாக்டர் லூக் கூறுகிறார். "மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவதற்காக மரடோனா எடுத்துக் கொண்டிருந்த மருந்துகளை  கவனத்தில் கொண்டு, அதற்கேற்ற மருத்துவ கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஒன்றிணைக்க நாங்கள் முயன்றோம்" என்று மருத்துவர் கூறுகிறார்.

Also Read | Footballer டியாகோ மரடோனாவுக்கு பதிலாக பாப் பாடகி மடோனாவுக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்

மரடோனாவை மருத்துவமனையில் தான் வைக்க வேண்டும் என்ற எந்த மருத்துவ அவசியமும் இல்லை. நாங்கள் அவரை ஒரு மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கலாம், ஆனால் எங்களுக்கு டியாகோ தேவை. வீட்டிலேயே இருப்பது என்பது அவருடைய முடிவு. இதில் எங்களுடைய எந்த முடிவுகளும் இல்லை, மரடோனாவின் மரணத்தில் எந்தவொரு மருத்துவ பிழை இல்லை.

"அவரைப் போன்ற ஒரு நோயாளிக்கு ஏற்படக்கூடிய இதய பிரச்சினை அவருக்கு இருந்தது. அந்த வாய்ப்பைக் குறைக்க சாத்தியமான அனைத்தும் செய்யப்பட்டன, ஆனால் சாத்தியமான விஷயங்கள் எதையும் நம்மால் தடுக்க முடியாது.

டியாகோவுக்கு அறுவை சிகிச்சை தேவை என்று அர்ஜென்டினா நியூரோ சர்ஜரி சங்கத்தின் முழு ஒப்புதலும் எங்களுக்கு இருந்தது. ஆறு மருத்துவர்கள் அவரை மதிப்பீடு செய்தனர். அவரது மரணத்திற்கும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை” அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமாகிவிட்டார். அவர் மறுவாழ்வு மையத்திற்கு சென்றிருக்கலாம், அப்படி செய்திருந்தால் அது சிறந்த முடிவாக இருந்திருக்கும், ஆனால் அதை அவர் விரும்பவில்லை. எது எப்படியிருந்தாலும், சில விஷயங்கள் மனிதர்களின் கையில் இல்லை”என்று அவர் கூறினார்.

Read Also | கடவுளின் கைக்கே திரும்பிச் சென்ற 'Hand of God' Maradona

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News