ராணுவமே இல்லாத உலகின் 10 நாடுகள்..!

’போர் என்றால் நரகம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ராணுவமே இல்லாமல் இருக்கும் உலகின் 10 நாடுகளை தெரிந்து கொள்ளுங்கள். அந்த நாடுகளிடம் ஏன் ராணுவம் இல்லை என்ற சுவாரஸ்ய தகவலையும் தெரிந்து கொள்வோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 9, 2024, 12:49 PM IST
  • ராணுவமே இல்லாத உலகின் 10 நாடுகள்
  • உள்நாட்டு பாதுகாப்புக்கு போலீஸ் உள்ளது
  • சில நாடுகள் அண்டை நாடுகளுடன் ஒப்பந்தம்
ராணுவமே இல்லாத உலகின் 10 நாடுகள்..! title=

ராணுவம் இல்லாத நாடுகளா? என கேட்க உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால் பல நாடுகள் இப்போது தங்களிடம் இருக்கும் ஆயுதங்களைக் கொண்டு அண்டை நாடுகளுடன் போர் செய்து கொண்டிருக்கின்றன. விதவிதமான ஆயுதங்கள், பீரங்கிகள், குண்டுகளைக் கொண்டு எதிரி நாடுகளை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் போர் என்றால் நரகம் என்ற கொள்கையின் அடிப்படையில் ராணுவமே இல்லாத 10 நாடுகள் இருக்கின்றன. அவை எந்த நாடுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து நாட்டில் 1869 ஆம் ஆண்டு முதல் நிலையான ராணுவம் கிடையாது. ஆனால் இந்த நாடு நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ளது. இக்கட்டான சூழலில் அமைதியை ஏற்படுத்தும் பிரிவு மட்டும் இருக்கிறது. அமெரிக்காவுடன் ஐஸ்லாந்துக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது. நோர்வே, டென்மார்க் மற்றும் பிற உறுப்பு நாடுகளுடன் ராணுவம் தொடர்பான ஒப்பந்தகளை செய்து கொண்டிருக்கிறது. 

மொரிஷியஸ்

நிலையான இராணுவம் மொரீஷியஸில் இல்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 10 ஆயிரம் போலீஸ் உள்ளனர். அவர்களே ராணுவமாகவும் செயல்படுவார்கள். காவல்துறை தலைவர் தான் ராணுவம் மற்றும் பிற சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு முடிவெடுப்பார். 

கோஸ்ட்டா ரிக்கா

கோஸ்டாரிகா 1949 ஆம் ஆண்டில் ராணுவத்தை ஒழித்தது. மக்களே அந்நாட்டின் பாதுகாவலர்கள் என்ற முடிவின் அடிப்படையில் செயல்படும் நாடு அது. ஆரோக்கியமான வாழ்வு, வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக இருக்கிறது. 

மேலும் படிக்க | தேர்தல் வாக்குப்பதிவு நாளில் நாட்டில் மொபைல் நெட்வொர்க்கை முடக்கிய பாகிஸ்தான்!

வாடிகன் நகரம்

வாடிக்கன் நகரம் போப் ஆண்டவர் ஆளுகையின் கீழ் இருக்கிறது. இருப்பினும் இத்தாலி இந்த நகரத்துக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் வத்திக்கானுக்கும் இத்தாலிக்கும் இடையே எந்தவொரு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தமும் இல்லை. இத்தாலிய ஆயுதப்படைகள் வத்திக்கான் நகரத்தை முறைசாரா முறையில் பாதுகாக்கின்றன. 

லிச்சென்ஸ்டீன்

லிச்சென்ஸ்டீன் நாடு நிதி காரணங்களால் 1868-ல் அதன் நிலையான இராணுவத்தை ஒழித்தது. ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பு உதவியுடன் இருக்கும் இந்த நாடு, உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக சிறிய ஆயுதங்களுடன் கூடிய போலீஸ் படையை பராமரிக்கிறது.

அன்டோரா

வலுவான நட்பு நாடுகளுடன் சர்வதேச ஒப்பந்தங்களை வைத்திருக்கும் அன்டோராவில் ஆயுதப்படைகள் இல்லை. ஸ்பெயின் மற்றும் பிரான்சுடனான உடன்படிக்கைகள் அன்டோராவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. அதே நேரத்தில் பொது ஒழுங்கை அந்நாட்டின் காவல்துறை பாதுகாக்கிறது.

செயின்ட் லூசியா

கரீபியன் தீவுகளில் அமைந்துள்ள செயின்ட் லூசியா நிலையான இராணுவப் படை இல்லாத நாடு. இங்கும் நாட்டின் பாதுகாப்புக்கு போலீஸ் மட்டுமே உள்ளது. இறையாண்மையை பாதுகாக்க கடலோர காவல்படை, துணை ராணுவ சேவை பிரிவு இருக்கிறது. 

டொமினிகா

1981 முதல், டொமினிகா நிலையான இராணுவத்தை வைத்திருக்கவில்லை. காமன்வெல்த் ஆஃப் டொமினிகா போலீஸ் படை, சட்ட அமலாக்கத்தைக் கையாளுகிறது. சிறப்புப் படைப் பிரிவு மற்றும் கடலோரக் காவல்படை ஆகியவை அவசரநிலையின்போது அதிகாரிகளின் கட்டளையின் கீழ் உருவாக்கப்படும். 

சாலமன் தீவுகள்

சாலமன் தீவுகள் 1946 ஆம் ஆண்டு முதல் இராணுவப் படை இல்லாமல் உள்ளன. காவல்துறையே அனைத்து அதிகாரங்களையும் கொண்ட நாடாக இருக்கிறது. உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான கடல்சார் கண்காணிப்புப் பிரிவினால் கையாளப்படுகிறது.

மேலும் படிக்க | பிரச்சனைகளுக்கு இடையிலும் மாலத்தீவுகளுக்கு இந்தியா உதவுமா? பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News