உண்மையை மறைத்த உலக சுகாதார அமைப்பு? 3 கேள்விகளை எழுப்பிய டிரம்ப்

WHO சீனாவை ஆதரிப்பதாகவும், WHO அமெரிக்காவிற்கு தவறான ஆலோசனைகளை வழங்கியது என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 18, 2020, 06:29 AM IST
  • டொனால்ட் டிரம்ப் மீண்டும் WHO-விதம் கேள்வி எழுப்பினார்.
  • டிசம்பர் மாதத்தில் ஒரு முக்கியமான அஞ்சல் குறித்து ஏன் பேசவில்லை?
  • WHO தவறான தகவல்களை வழங்கியது.
  • கொரோனாவை தொற்றுநோயாக அறிவிப்பதில் தாமதம்.
  • அந்த அமைப்புக்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா.
உண்மையை மறைத்த உலக சுகாதார அமைப்பு? 3 கேள்விகளை எழுப்பிய டிரம்ப் title=

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் உலக சுகாதார அமைப்பை (WHO) தாக்கியுள்ளார். WHO அமைப்பு மீது  குற்றம் சாட்டி அதிபர் டிரம்ப் 3 கேள்விகளை எழுப்பியுள்ளார். கொரோனா மனிதர்களிடையே பரவக்கூடும் என்று டிசம்பரில் உலக சுகாதார அமைப்பு தைவானில் இருந்து தகவல்களைப் பெற்றது. ஆனால் உலக சுகாதார அமைப்பு உலகிற்கு பொய்யானது மட்டுமல்லாமல் தவறான தகவல்களையும் கொடுத்தது என ஒரு பத்திரிகையாளர் செய்தியை மேற்கோள் காட்டி இதைக்கூறியுள்ளார்.

WHO-விடம் கேட்ட 3 கேள்விகள்:

ஃபாக்ஸ் நியூஸ் பத்திரிகையாளர் லான்ஹி செனின் கேள்விகளை மீண்டும் வலியுறுத்திய டிரம்ப், மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை விவரிக்கும் டிசம்பரில் தைவானிய சுகாதார அதிகாரிகளின் மின்னஞ்சலை WHO ஏன் புறக்கணித்தது என்று ட்வீட் செய்துள்ளார். 

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் WHO உலகளவில் வைரஸ் பரவுகையில் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் கூற்றுக்களை ஏன் தெரிவித்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

இந்த தகவல்கள் அனைத்தையும் மீறி, ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க WHO ஏன் இவ்வளவு காலதாமதம் செய்தது என்றும் டிரம்ப் கேட்டுள்ளார்.

WHO மீது தொடர்ந்து குற்றம்சாட்டும் அமெரிக்கா:

உலகம் முழுவதும் தொற்றுநோயை பரவக்காரணம் சீனா தான் என்று ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. மேலும் சீனாவையும் உலக சுகாதார அமைப்பையும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. WHO சீனாவை ஆதரிப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். WHO அமெரிக்காவிற்கு தவறான ஆலோசனைகளை வழங்கியது என்றும் அவர் கூறினார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, இந்த வைரஸ் குறித்து உலகம் தெரிந்துகொள்ள சீனா விரும்பவில்லை என்றும், அதில் சீனாவை WHO ஆதரித்தது என்றும் கூறினார்.

நிதியுதவி நிறுத்திய அமெரிக்கா:

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிபர் டிரம்ப் பேசுகையில், உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா அதிக அளவில் நிதி செலுத்தி வருகிறது. ஆனால் அந்த அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே உலக சுகாதார அமைப்பு அளிக்கப்படும் நிதியை நிறுத்தப்போவதாக அறிவித்தார். 

அதன்பிறகு கொரோனா தொற்றுநோய் விவகாரத்தில் உலக சுகதார அமைப்பு சரியான நேரத்தில், வெளிப்படையான முறையில் தகவல்களைப் பெறவும், அதை கண்காணிக்கவும் தவறிவிட்டது. இதனால் அந்த அமைப்புக்கு அளித்து வந்த நிதியுதவி நிறுத்தப்படுகிறது என்று கூறினார்.

Trending News