பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்பின் உடல்நிலை மோசமடைந்ததால் துபாயில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Updated: Dec 3, 2019, 08:26 AM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்பின் உடல்நிலை மோசமடைந்ததால் துபாயில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷரப் துபாயில் வசித்துவருகிறார். கடந்த 2016ம் ஆண்டு அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக துபாய்க்கு சென்றார். 

இவர் மீது ராஜ துரோகம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அவர் உடல்நிலை காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லமுடியாத நிலையில் இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கோர்ட்டு ஏற்றுக்கொண்டு, ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கடந்த மே மாதம் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது இதனால் இவர் மீண்டும் இன்று துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.