தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானங்களை தடை செய்தது இந்த ஐந்து நாடுகள்! காரணம்?

அண்மையில் நாட்டில் ஒரு கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஐந்து நாடுகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 22, 2020, 02:42 PM IST
தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானங்களை தடை செய்தது இந்த ஐந்து நாடுகள்! காரணம்?

Johannesburg: அண்மையில் நாட்டில் ஒரு கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து குறைந்தது ஐந்து நாடுகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன. 

தற்போது 501.V2 மாறுபாடு என அழைக்கப்படும் SARS-COV-2 வைரஸின் மாறுபாடு பரவாமல் தடுக்க விமானங்களை தடை செய்வதாக அறிவித்த நாடுகளில் ஜெர்மனி, துருக்கி, இஸ்ரேல், சுவிட்சர்லாந்து மற்றும் சவுதி அரேபியா ஆகியவை அடங்கும். இந்த தடை பெரும்பாலான நாடுகளில் திங்கள்கிழமை (டிசம்பர் 21) நடைமுறைக்கு வந்தது.

ALSO READ | லண்டனில் இருந்து டெல்லி வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தடையை அறிவித்த முதல் நாடுகளில் ஜெர்மனியும் (Germany) ஒன்றாகும். "கொரோனா வைரஸ் (CoronaVirus) பிறழ்வு ஏற்பட்டதாகக் கூறப்படுவதால், ஜெர்மனி மற்றும் கிரேட் பிரிட்டன் (Britain) மற்றும் தென்னாப்பிரிக்கா (South Africa) இடையேயான பயண விருப்பங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு (Central government) விரும்புகிறது" என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் மார்டினா ஃபீட்ஸ் கூறினார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பும் குடிமக்கள் திரும்பி வரும்போது 30 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறி இஸ்ரேல் (Israel) ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 20) விமானங்களை தடை செய்தது. புதிய மாறுபாடு கிழக்கு கேப்பில் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் குவாசுலு-நடால் மற்றும் வெஸ்டர்ன் கேப்பையும் பாதிக்கிறது.

ALSO READ | கொரோனா தடுப்பூசி ஹலாலா ஹராமா.. இஸ்லாமிய மதகுருக்கள் கூறுவது என்ன..!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News