நவ நாகரீக அடையாளமாக கருதப்படுவது ஆடைகள் தான். அந்த ஆடைகளில் எத்தனை விதங்கள், எத்தனை அழகு.
வித விதமான ஆடைகளை அணிந்துக்கொள்வதில் பெண்களுக்கு அலாதி இன்பம். இந்த இன்பத்தினை மேலும் அதிகரிக்க வேண்டுமெனில் அணியும் ஆடைகள் அவர்களின் விருப்பத்தில் இருந்தல் அவசியம்.
இதற்காவே தற்போது Fasion Designer என்னும் பிரிவு கல்வியும் உள்ளது. சான்றிதழ் வகுப்புகள் துவங்கி பட்டைய படிப்பு என இத்துறை படிப்புகள் அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த படிப்பில் கைதேர்ந்தவர்கள் பலர் தங்கள் திறமைகளால் புகழ்ச்சி அடைந்து தான் வருகின்றனர்.
அவர்களின் தனிப்பட்ட வடிவமைப்பும், நேர்த்தியான அழகு கலையும் அதற்கு துணை நிற்கின்றது. இதேப்போன்று தன் தனி திறமையால் உலக மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார் பிரன்ச் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர்.
ஆம்., பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Sylvie Facon என்பவர், தனது ஆடை வடிவமைப்புகளால் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றார். இவரது ஆடைகளின் தனிச்சிறப்பு என்னவென்றால்,. பொருட்களுடன் பின்னிப் பினைந்த வடிவமைப்பினை ஆடைகளில் வழங்குவது தான். அவரது படைப்புகள் ஒரு சில உங்கள் பார்வைக்கு.
<