India: Gilgit-Baltistanஐ ஐந்தாவது மாகாணமாக மாற்ற பாகிஸ்தானுக்கு சட்டபூர்வ உரிமையில்லை

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தை ஐந்தாவது மாகாணமாக மாற்ற பாகிஸ்தானுக்கு சட்டபூர்வமான அடிப்படை உரிமை ஏதும் இல்லை என்றும், இந்த நடவடிக்கை பெயரளவில் தான் இருக்கும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2020, 10:08 PM IST
  • PoKவின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தை ஐந்தாவது மாகாணமாக மாற்ற பாகிஸ்தானுக்கு சட்டபூர்வமான உரிமையில்லை என இந்தியா கண்டனம்...
  • கில்கிட்-பால்டிஸ்தானின் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது...
India: Gilgit-Baltistanஐ ஐந்தாவது மாகாணமாக மாற்ற பாகிஸ்தானுக்கு சட்டபூர்வ உரிமையில்லை title=

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தை ஐந்தாவது மாகாணமாக மாற்ற பாகிஸ்தானுக்கு சட்டபூர்வமான அடிப்படை உரிமை ஏதும் இல்லை என்றும், இந்த நடவடிக்கை பெயரளவில் தான் இருக்கும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "ராணுவ ரீதியாக ஆக்கிரமிக்கப்பட்ட" கில்கிட்-பால்டிஸ்தான் " பிராந்தியத்தின் அந்தஸ்தை மாற்ற பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும் சட்டபூர்வமான அடிப்படை ஏதும் இல்லை, அது முற்றிலும் தவறானது" என்று தெரிவித்தார்.

PoK, அதாவது பாகிஸ்தான் ஆக்ரமித்திருக்கும் காஷ்மீர் குறித்த தனது "தெளிவான மற்றும் நிலையான" நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், "ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கைன் முழு பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தன, இனியும் அப்படியே இருக்கும்.  இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் பாகிஸ்தானுக்கு கருத்து தெரிவிக்க எந்த உரிமையும் கிடையாது" என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.

கில்கிட்-பால்டிஸ்தானின் சட்டமன்றத்திற்கான தேர்தல் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்தத் தேர்தல் நவம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது, முக்கியமான இடத்தில் அமைந்துள்ள பிராந்தியத்தில் இஸ்லாமாபாத் மேற்கொள்ளும் தந்திரமான நகர்வுகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Gilgit-Baltistan பகுதியை நாட்டின் ஐந்தாவது மாகாணமாக மாற்றும் திட்டங்கள் தொடர்பாக பாகிஸ்தானில் அரசியல் நடவடிக்கைகள் பரபரப்படைந்து வருகின்றன. அந்நாட்டின் மற்ற நான்கு மாகாணங்களைப் பற்றி பார்ப்போம். பஞ்சாப், அதிக மக்கள் தொகை கொண்ட பகுதி. பலூசிஸ்தான், அளவில் மிகப்பெரியது, ஆப்கானிஸ்தான் அருகில் உள்ளது கைபர் பக்துன்க்வா மாகாணம்.  நான்காவது சிந்து மாகாணம்.  

Gilgit-Baltistan பகுதியை நாட்டின் ஐந்தாவது மாகாணமாக மாற்றுவது தொடர்பாக செப்டம்பர் 16ஆம் தேதியன்று, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜாவேத் பஜ்வா மற்றும் ISIஇன் DG, லெஃப்டினெண்ட் ஜென்ரல் ஃபைஸ் ஹமீத் இருவரும் எதிர்கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்தனர்.

கில்கிட்-பால்டிஸ்தானில் தேர்தல் தேதியை நிர்ணயிக்க ஜனாதிபதி டாக்டர் ஆரிஃப் ஆல்வி செப்டம்பர் 23 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. "2017ஆம் ஆண்டின் தேர்தல் சட்டத்தின் பிரிவு 57 (1) இன் படி கில்கிட்-பால்டிஸ்தான் (GB) சட்டமன்றத்திற்கு பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு 2020 நவம்பர் 15 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் என்பதை பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கில்கிட் மற்றும் பால்டிஸ்தான் பகுதிகள் உட்பட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் முழுமையான பகுதியாக இருப்பதால், அதன் முழு சட்டபூர்வமான உரிமை தன்னிடம் உள்ளதாக, இந்தியா பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசாங்கத்துக்கோ அல்லது அதன் நீதித்துறையோ சட்டவிரோதமாகவும், பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள கில்கிட் மற்றும் பால்டிஸ்தான் பகுதிகளில் எந்தவிதமான உரிமையும் கிடையாது என்று இந்தியா கூறியுள்ளது.

ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று கில்கிட்-பால்டிஸ்தானில் தேர்தல்கள் நடைபெறவிருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவல் காரணமாக தேர்தல் ஒத்திப்போடப்பட்டது. சட்டமன்றத்திற்கான 24 தொகுதிகளில் வாக்கெடுப்பு நடைபெறும். முந்தைய சட்டசபையின் ஐந்தாண்டு காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அது, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்)  கட்சியின் ஐந்தாண்டு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மொத்தம் 33 தொகுதிகள் உள்ளன, அவற்றில் ஆறு தொகுதிகள் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் மூன்று தொகுதிகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சிகள் தங்கள் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த சிறப்பு இடங்கள் நிரப்பப்படுகின்றன. கில்கிட்-பால்டிஸ்தானின் அந்தஸ்தை முழு அளவிலான மாகாணமாக உயர்த்துவதற்கான ஆலோசனைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு அங்கு தேர்தல் தேதியை  அறிவித்துள்ளது.

Read Also | Cyber Attack | உலகத்தையே ஏமாற்ற சீனா செய்யும் தந்திரமான ஏற்பாடுகள்

Trending News