வாஷிங்டன்: உலகளவில் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18, 2020) 30 மில்லியனைத் தாண்டியுள்ளது. அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 944,000 க்கும் அதிகமாகிவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,065,728 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 944,604 ஆகவும் உயர்ந்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மையம் (CCSE) தனது சமீபத்திய புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.
CCSE-ன் படி, உலகின் மிக அதிக தொற்று எண்ணிக்கையிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்காவே (America) முதலிடத்தில் உள்ளது. இங்கு 6,674,070 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 197,615 பேர் இறந்துள்ளனர்.
5,118,253 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் இந்தியா (India) தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 83,198 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் பொறுத்தவரை, பிரேசில் (Brazil) மூன்றாவது இடத்தில் (4,455,386) உள்ளது. இதைத் தொடர்ந்து, ரஷ்யா (1,081,152), பெரு (744,400), கொலம்பியா (736,377), மெக்சிகோ (684,113), தென்னாப்பிரிக்கா (655,572), ஸ்பெயின் (625,651), அர்ஜென்டினா (601,713), பிரான்ஸ் (454,266), சிலி (441,150), ஈரான் (413,149), இங்கிலாந்து (384,083), பங்களாதேஷ் (344,264), சவுதி அரேபியா (328,144), ஈராக் (307,385), பாகிஸ்தான் (303,634), துருக்கி (298,039), இத்தாலி (293,025), பிலிபைன்ஸ் (276,289), ஜெர்மனி (269,048), இந்தோனேஷியா (232,628), இஸ்ரே: (175,256), உக்ரைன் (170,373), கனடா (142,879), பொலிவியா (128,872), கதார் (122,693), ஈக்வேடார் (122,257), ரோமானியா (108,690), கஜகஸ்தான் (107,056), டொமினிகன் குடியரசு (106,136), பனாமா (104,138) மற்றும் எகிப்து (101,641) என்ற அளவில் கொரோனா வைரசின் என்ற வகையில் கொரோனா வைரசின் எண்ணிக்கை உள்ளது என CSSE புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000-க்கு மேல் உள்ள பிற நாடுகள் பிரேசில் (134,935), மெக்ஸிகோ (72,179), இங்கிலாந்து (41,794), இத்தாலி (35,658), பிரான்ஸ் (31,103), பெரு (31,051), ஸ்பெயின் (30,405), ஈரான் (23,808), கொலம்பியா (23,478), ரஷ்யா (18,996), தென்னாப்பிரிக்கா (15,772), அர்ஜென்டினா (12,460), சிலி (12,142), ஈக்வடார் (10,996) ஆகியவை ஆகும்.
ALSO READ: COVID-19 தொற்று பரவ முக்கிய காரணம் குடும்ப நபர்கள் தான்: பிரெஞ்சு சுகாதார அமைச்சர்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR