பாகிஸ்தானின் பெஷாவரில் கடுமையான வெடி விபத்து: 7 பேர் பலி!!

பெஷாவரின் திர் காலனியில் ஒரு செமினரிக்குள் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று கைபர் பக்துன்க்வா காவல்துறைத் தலைவர் டாக்டர் சனாவுல்லா அப்பாஸி தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 27, 2020, 11:16 AM IST
  • பாகிஸ்தானின் பேஷாவரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
  • 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • இதில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பித்டதக்கது.
பாகிஸ்தானின் பெஷாவரில் கடுமையான வெடி விபத்து: 7 பேர் பலி!! title=

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் (Pakistan) பெஷாவரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பித்டதக்கது. திர் காலனியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

பெஷாவரின் (Peshawar) திர் காலனியில் ஒரு செமினரிக்குள் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று கைபர் பக்துன்க்வா காவல்துறைத் தலைவர் டாக்டர் சனாவுல்லா அப்பாஸி மற்றும் பிற காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஜியோ நியூஸ், செய்தி வெளியிட்டுள்ளது.

மத பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நடந்ததால் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் மற்றும் அவர்களின் பயிற்றுநர்கள் அதிகமாக உள்ளனர். மீட்பு 1122 இன் படி, காயமடைந்தவர்கள் லேடி ரீடிங் மருத்துவமனை மற்றும் மற்றொரு மருத்துவ வசதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ALSO READ: பாகிஸ்தானில் வலுக்கும் தனி பலுசிஸ்தான் போராட்டம்.. சீனாவிற்கு தலைவலியை கொடுப்பது ஏன்.!!!

காயமடைந்த சில குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருப்பதால் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், காவல்துறை மற்றும் மீட்பு குழுக்கள் குற்றம் நடந்த இடத்தை அடைந்து மீட்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளன. குண்டுவெடிப்பின் தன்மை குறித்து தற்போது எதையும் கூற முடியாது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் காவல்துறை அதிகாரிகளும் வெடிப்பின் தன்மையையும் இதற்கு பின்னால் எந்த அமைப்பு இருக்கக்கூடும் என்பது பற்றியும் தெரிந்துகொள்ள இது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

ALSO READ: சீனாவில் கடும் உணவு நெருக்கடி, விவசாய நிலத்தை பிற நாடுகளில் குத்தகைக்கு எடுக்கும் நிலை..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News