சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்பவரை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதியினருக்கு சிறை..!!!

சிங்கப்பூரில் உள்ள இந்திய தம்பதியினர் ஒருவர் தங்களின் வீட்டு வேலைக்காக வைத்திருந்தவரை கொடுமைபடுத்தியதற்காக, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2020, 08:41 PM IST
  • விசாரணையில் இந்த தம்பதியினர், வீட்டு வேலைக்கு வந்த அமந்தீப் கோரை மோசமாக நடத்தியது உறுதிபடுத்தப்பட்டது
  • போலீஸார் நடத்திய விசாரணையில், அவருக்கு பல இடங்களில் பலத்த காயங்களும், காயம் இருந்த தழும்புகளும் இருந்தது தெரியவந்துள்ளது.
  • மருத்துவ அறிக்கைகள் இவருக்கு காயம் ஏற்பட்டதை உறுதிபடுத்தியுள்ளன..
சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்பவரை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதியினருக்கு சிறை..!!!  title=

சிங்கப்பூரில் உள்ள இந்திய தம்பதியினர் ஒருவர் தங்களின் வீட்டு வேலைக்காக வைத்திருந்தவரை கொடுமைபடுத்தியதற்காக, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 15,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஃபராஹ் தெஹ்சீன் மற்றும் மொஹம்மத் தஸ்லீம் என்ற அந்த தம்பதியினரின் வீட்டில் அமந்தீப் கோர் என்பவர், 2016 நவம்பர் மாதம் முதல், வீட்டு வேலை பார்த்து வந்தார்.

அப்போது முதல் அவர் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்துள்ளார்.

 சில முறை குச்சி கம்புகளால், அவரை இந்த தம்பதியினர் தாக்குயுள்ளனர்.

வீட்டி வேலை சரியாக செய்யவில்லை என்று பல முறை கொடுமைபடுத்தியுள்ளனர்.

மேலும் ஃபர்ஹா தனது கணவனுடன் தவறான முறையில் தொடர்பு வைத்திருப்பதாக கூறி அவரை பல முறை அடித்துள்ளார்.

 ஒரு முறை கொடுமை தாங்காமல் அங்கிருந்த ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்ற போது,  அவரை அந்த எஸ்டேட்டில் பெயிண்ட் வேலை செய்யும் மணி மனோகரன் என்பவர் காப்பாற்றியுள்ளார்.

பின்னர் அவர், ஒரு காப்பாகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

மேலும் படிக்க | ஊழியர் இறந்துட்டாரு, ஆனா வியாபாரம் முக்கியம் தானே: பிரேசில் சூப்பர் மார்கெட்

போலீஸார் நடத்திய விசாரணையில், அவருக்கு பல இடங்களில் பலத்த காயங்களும், காயம் இருந்த தழும்புகளும் இருந்தது தெரியவந்துள்ளது. அதனை மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.

மேலும் படிக்க | வட கொரிய அதிபர் Kim Jong Un சகோதரிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியிருப்பதன் மர்மம் என்ன….!!!!

விசாரணையில் இந்த தம்பதியினர், வீட்டு வேலைக்கு வந்த அமந்தீப் கோரை மோசமாக நடத்தியது உறுதிபடுத்தப்பட்டதால்,  சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

விஷயம் அம்பலமானவுடன், கவுர் குளியல் அறையில் வழுக்கி விழுந்ததால், அடிப்பட்டதாக கூறினால், பணம் தருவதாக கூறினர். ஆனால், அமந்தீப் கவுர் அதனை மறுத்து விட்டார்.

Trending News