உக்ரைனில் இருந்து உடனடியாக இந்தியர்கள் வெளியேறவும்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

Russia - Ukraine Crisis: உக்ரைனில் எஞ்சியிருக்கும் இந்தியர்கள், ஏதாவது ஒரு வழியில் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், அதற்காக போலந்து, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 26, 2022, 06:21 AM IST
  • உக்ரைனில் எஞ்சியிருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்
  • போலந்து, ருமேனியா, ஹங்கேரி ஸ்லோவாக்கியாவில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்
  • ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்படும் அச்சம்
உக்ரைனில் இருந்து உடனடியாக இந்தியர்கள் வெளியேறவும்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல் title=

ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த பல நடந்து வரும் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் முடிவதாக தெரியவில்லை. தற்போது, உக்ரைனை விட்டு வெளியேறுமாறு குடிமக்களை இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏதாவது ஒரு வழியில் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், அதற்காக போலந்து, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளுமாறும், உக்ரைனில் எஞ்சியிருக்கும் இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. அக்டோபர் 19 அன்று, உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், இந்திய குடிமக்கள் மீண்டும் அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் மோசமடைந்து வரும் சூழ்நிலை காரணமாக அங்குள்ள இந்தியர்களை சீக்கிரம் வெளியேறுமாறு இந்தியா வலியுறுத்தி இருக்கிறது. உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாயன்று வெளியிட்ட அறிவுறுத்தல், அந்நாட்டில் மக்களின் அவல நிலையை வெளிக்காட்டுவதாக இருக்கிறது, ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக, அனைத்து குடிமக்களும் போரினால் பாதிக்கப்பட்ட தேசத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | இங்கிலாந்தின் பிரதமராகிறார் ரிஷி சுனக்! இங்கிலாந்தை ஆளப்போகும் வம்சாவளி இந்தியர்

உக்ரைன், ரசாயன வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்த வாரம் ரஷ்யா குற்றம் சாட்டி இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி, இந்த போரில் அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதை இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். 

ரஷ்யா குண்டுகள் கொண்டு தாக்குதல்களை நடத்தினால் அது மிகக் கடுமையான தவறாக கருதப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரம், உக்ரைனில் மீதம் உள்ள அனைத்து இந்தியர்களும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் படிக்க | 22 வயதில் துபாய் பயணம்! 24 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த NRI

உக்ரைனில் தொடர்ந்து மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, உக்ரைனில் இருந்து வெளியேற கிடைக்கும் வழிகள் எதுவாக இருந்தாலும் தனை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது உக்ரைனில் இருக்கும் நிலைமையை காட்டுகிறது.

அக்டோபர் 19 அன்று முதல் அறிவுரை வழங்கப்பட்ட பிறகு, பல இந்திய குடிமக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியதாக தெரிய வந்துள்ளது. தற்போது எஞ்சி இருக்கும் இந்திய குடிமக்கள், உக்ரைன்  எல்லையை கடப்பதற்கு தேவையான உதவிகளுக்கு, போலந்து, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News