சிறுமியை பலாத்காரம் செய்த சிங்கபூர் வாழ் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை!

13-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிங்கபூரில் வசிக்கும் 31-வயது இந்தியருக்கு 13 ஆண்டு சிறை வழங்கப்பட்டுள்ளது!

Updated: Jan 12, 2019, 02:00 PM IST
சிறுமியை பலாத்காரம் செய்த சிங்கபூர் வாழ் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை!
Representational Image

13-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிங்கபூரில் வசிக்கும் 31-வயது இந்தியருக்கு 13 ஆண்டு சிறை வழங்கப்பட்டுள்ளது!

சிங்கபூரில் வசிக்கும் மினிமார்ட் ஊழியர் உதயகுமார் தட்சணாமூர்த்தி. இவர் தனது அங்காடிக்கு வந்த 13-வயது சிறுமியிடம் பாலியல் தொடர்பான காணொளிகளை காட்டியதாகவும், இரண்டுமுறை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் 31-வயது இந்திய ஆடவருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனையும், 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தட்சணா மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர் கிட்டத்தட்ட 10 மாதங்களாக சிறுமியைப் பாலியல் ரீதியாகச் சீண்டியதாக தெரிகிறது. இந்த செயல்களைக் கண்ட தட்சணா மூர்த்தியின் காதலி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்து புகாரின் பேரிலேயே தட்சணா மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் சிறுமியிடம் பாலியல் உறுவு குறித்து கற்றுதருவதாகவும், பின்னர் பாலுறவு குறித்து அறிந்துக்கொள்ள சிறுமியிடம் வீடியோக்களை கொடுத்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து சிறார்களை பாலியல் தூண்டலுக்கு ஆளாக்குதல் என்ற பிரிவில் தட்சணா மூர்த்திக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது!