புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஜப்பானில் செப்டம்பர் 17 அன்று நாடாளுமன்ற அமர்வு

ஜப்பானில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க செப்டம்பர் 17 ஆம் தேதியன்று ஒரு நாடாளுமன்ற அமர்வை நடத்த ஜப்பான் முடிவு செய்துள்ளதாக ஜப்பான் ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2020, 01:43 PM IST
  • ஆளும் (LDP), தனது அடுத்த தலைவரை எப்படி எப்போது தேர்வு செய்வது என்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
  • செப்டம்பர் 17 அன்று ஒரு சிறப்பு நாடாளுமன்ற அமர்வை நடத்தி, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  • ஜப்பானின் வரலாற்றிலேயே மிகச்சிறந்த பிரதமர் ஷின்ஸோ அபே – டிரம்ப்.
புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஜப்பானில் செப்டம்பர் 17 அன்று நாடாளுமன்ற அமர்வு title=

ஜப்பான் (Japan) பிரதமர் ஷின்ஸோ அபே (Shinzo Abe) அவர்கள் தன் பதவியிலிருந்து விலகியதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க செப்டம்பர் 17 ஆம் தேதியன்று ஒரு நாடாளுமன்ற அமர்வை நடத்த ஜப்பான் முடிவு செய்துள்ளதாக ஜப்பான் ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி (LDP), தனது அடுத்த தலைவரை எப்படி எப்போது தேர்வு செய்வது என்பது பற்றி செப்டம்பட் 1 ஆம் தேதி ஒரு பொதுக்குழு சந்திப்பில் முடிவு செய்யும் என்று பொது ஒளிபரப்பாளரான NHK கூறியுள்ளது.

இதற்கிடையில் LDP உயர்மட்ட அதிகாரிகள், செப்டம்பர் 13-15 தெதிகளில், கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்க இரு அவைகளிலும் தங்கள் உறுப்பினர்களை தயாராக வைத்திருப்பதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

செப்டம்பர் 17 அன்று ஒரு சிறப்பு நாடாளுமன்ற அமர்வை நடத்தி, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க கட்சி முடிவு செய்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ALSO READ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா செய்ய உள்ளார்... அடுத்த பிரதமர் யார்..!!!

தற்போது, LDP கொள்கை ஆய்வு ஆணையத் தலைவர் ஃபுமியோ கிஷிடா மற்றும் முன்னாள் LDP பொதுச் செயலாளர் ஷிகேரு இஷிபா ஆகியோர் கட்சித் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். தலைமை அமைச்சரவை செயலாளரான யோஷிஹீடே சுகாவும் ஒரு வலுவான வேட்பாளராக பார்க்கப்படுகிறார்.

இதற்கிடையில் விடைபெறும் ஷின்ஸோ அபேவைப் (Shinzo Abe) பாராட்டி பல உலகத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.

ஜப்பானின் வரலாற்றிலேயே மிகச்சிறந்த பிரதமர் ஷின்ஸோ அபே (Shinzo Abe) என அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அவரை பாராட்டியுள்ளார். 

ALSO READ: வட கொரியாவில் கண்ணாமூச்சி ரே ரே Part 2: கிம்மின் சகோதரி எங்கே?

Trending News