Gilgit-Baltistan வரலாறும், பாகிஸ்தான் எடுத்துள்ள தற்கொலை முடிவும் ..!!!

கொரோனாவால் எழுந்துள்ள நெருக்கடி நிலையில் இருந்து மக்களை திசை திருப்ப, ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் குட்டையை குழப்ப பாகிஸ்தான் சதி செய்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2020, 12:02 PM IST
  • இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் சீனா ஆகிய மூன்று அணுசக்தி நாடுகளை ஒன்றிணைக்கும் மையமாக இப்பகுதி இருப்பதால், கில்கிட் பல்டிஸ்தான் ஆசியாவின் மிக முக்கியமான பகுதியாகும்.
  • மத்திய கிழக்கு நாடுகளும் ரஷ்யாவும் கூட கில்கிட் பல்டிஸ்தான் பகுதிக்கு அருகில் உள்ளன.
  • இந்தியாவுக்கு எதிராக ஒரு மறைமுக போரை நடத்துவதற்கு பாகிஸ்தான், கில்கிட் பல்டிஸ்தானை முழுவதுவமாக பயன்படுத்துகிறது.
Gilgit-Baltistan வரலாறும், பாகிஸ்தான் எடுத்துள்ள தற்கொலை முடிவும் ..!!! title=

கொரோனாவால் எழுந்துள்ள நெருக்கடி நிலையில் இருந்து மக்களை திசை திருப்ப, ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் குட்டையை குழப்ப பாகிஸ்தான் சதி செய்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கித் பல்டிஸ்தான் ஐந்தாவது மாகாணமாக இணைப்பது குறித்த அறிவிப்பை முறையாக் வெளியிடுவார் என அந்நாட்டின் காஷ்மீர் விவகார அமைச்சர்   கூறியுள்ளார்.

கில்கிட் பல்டிஸ்தான், பகுதியின் வரலாற்றை பார்த்தால், அது எப்போதும் ஜம்மு-காஷ்மீரின் ஒருங்கிணைந்த  பகுதியாகும். ஒரு காலத்தில் சீக்கியர்கள் ஆட்சி செய்த பகுதி யான இது, ஆங்கிலோ-சீக்கியப் போருக்குப் பிறகு (1845-46) பிரிட்டிஷ்களின் கைகளுக்குச் சென்றது, அதைத் தொடர்ந்து, ராஜா குலாப் சிங் 1846 ஆம் ஆண்டில் அமிர்தசரஸ் உடன்படிக்கை மூலம் ஆங்கிலேயர்களிடமிருந்து ஜம்மு-காஷ்மீரை கைப்பற்றினார்.1899 இல், கில்கிட், பால்டிஸ்தான் மற்றும் லடாக் பகுதி ஒன்றிணைக்கப்பட்டு ஒரு எல்லைப்புற அமைப்பாக அமைந்தது.

பின்னர் 1935 ஆம் ஆண்டில், மகாராஜா ஹரி சிங்கிடமிருந்து கில்கிட்டை ஆங்கிலேயர்கள் அறுபது ஆண்டு குத்தகைக்கு எடுத்துக் கொண்டனர். இருப்பினும், ஹரி சிங் ஆதிக்கத்தின் கீழ் இப்பகுதி தொடர்ந்து ஆட்சி செய்யப்பட்டது. எனவே இப்பகுதி எப்போதும் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக ஆளப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதேசத்துடன் எந்த வித தொடர்பும் இல்லை.

ஆயினும்கூட, இதில் உள்ள சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பாகிஸ்தான் அரசியலமைப்பில் கூட குறிப்பிடப்படாத ஒரு பகுதி, பாகிஸ்தானின் ஐந்தாவது மாகாணமாக மாறும் என்பது தான். உண்மையில், பாக்கிஸ்தானிய அரசியலமைப்பின் பிரிவு 1 இல் பாகிஸ்தான் உள்ள பகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கில்கிட் பல்டிஸ்தான் தொடர்பாக  எந்த குறிப்பையும் காணவில்லை. அரசியலமைப்பிலேயே குறிப்பிடப்படாத ஒரு பகுதியில், ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருவதெலாம் பாகிஸ்தான் போன்ற நாட்டில் தான் நடக்கும்.  

அது மட்டுமல்ல, கில்கிட் பல்டிஸ்தானில் பாகிஸ்தான் எப்போதும், சட்டங்களை மாற்றிக் கொண்டே வருவது, அதன் தெளிவற்ற நிலையை எடுத்து வருகிறது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

1949 கராச்சி ஒப்பந்தத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட எல்லைப்புற குற்றவியல் ஒழுங்குமுறைகள் (FCR) மூலம் பாகிஸ்தான் இப்பகுதியை ஆட்சி செய்ய தொடங்கியது. இந்த விதிமுறைகள் 1975 இல் ரத்து செய்யப்பட்டன. மேலும் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்கள் இப்பகுதியில் அமல்படுத்தப்பட்டன.

1994 ஆம் ஆண்டில், இப்பகுதியை வடக்கு பகுதிகளுக்கான கவுன்சில் சட்டங்களால் ஆட்சி செய்யத் தொடங்கியது. இருப்பினும், 2009 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிக்கு அதிகாரமளித்தல் மற்றும் சுய ஆளுமை சட்டம் (2009) கொண்டு அதை அப்பகுதியில் அமல்படுத்தியது

இந்த உத்தரவு பின்னர்,  கில்கித் பல்டிஸ்தான் ஆணை (2018)  மூலம் மாற்றப்பட்டது.  பின்னர், கில்கிட் பால்டிஸ்தான் சீர்திருத்த ஆணை / மசோதா 2019 என்ற சட்டத்தை கொண்டு வர பாகிஸ்தான் அரசு செயல்பட்டு வந்தது.

ALSO READ | Gilgit-Baltistan: புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையானது பாகிஸ்தான் நிலை..!!

இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் சீனா ஆகிய மூன்று அணுசக்தி நாடுகளை ஒன்றிணைக்கும் மையமாக இப்பகுதி இருப்பதால்கில்கிட் பல்டிஸ்தான் ஆசியாவின் மிக முக்கியமான பகுதியாகும். இது மத்திய ஆசியா, தென்மேற்கு ஆசியா மற்றும் தெற்காசியா உள்ளிட்ட ஆசியாவின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் ஒரு புள்ளியாகும்.

மத்திய கிழக்கு நாடுகளும் ரஷ்யாவும் கூட கில்கிட் பல்டிஸ்தான் பகுதிக்கு அருகில் உள்ளன. 

இந்த பகுதியை, பாகிஸ்தானின் முழு ஆதரவுடன் சீன சுரண்டி வருகிறது. சீனாவின் CPEC சீனா பாக்ஸிஸ்தான் பொருளாதார மண்டலம், அதன் கட்டுமானம் மற்றும் வாகனங்களின் இயக்கம் காரணமாக இப்பகுதி சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்கொள்கிறது.

இந்த திட்டத்திற்காக, கில்கிட் பல்டிஸ்தானில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள் என அப்பகுதி மக்கள் இதற்கு எதிராக போராடி வருகின்றனர்.

இந்தியாவுக்கு எதிராக ஒரு மறைமுக போரை நடத்துவதற்கு பாகிஸ்தான், கில்கிட் பல்டிஸ்தானை முழுவதுவமாக   பயன்படுத்துகிறது. இதற்காக பாகிஸ்தான் இந்த பிராந்தியத்தை வளர்ச்சியடையாமல் மற்றும் உலகின் பிற பகுதிகளுடன் துண்டித்து வைத்துள்ளது.

சீனாவின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான், அதன் பேச்சை கேட்டு கில்கித் பல்டிஸ்தானை  ஐந்தாவது மாகாணமாக மாற்றுவதன் மூலம், பாகிஸ்தான் ஒரு தற்கொலை முடிவு எனக் கூறலாம். மேலும், சர்வதேச தளங்களில் இந்தியாவை எதிர் கொள்வதற்கான நிலையை பாகிஸ்தான் முற்றிலும் இழக்கும். 

ALSO READ  Gilgit-Baltistan தேர்தல்: சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கும் பாக்.கின் தில்லாலங்கடி..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News