கைவிட்டாரா கடவுள்... 2 வயது சிறுவனுக்கு சிறை - வட கொரியாவில் கொடூர சம்பவம்!

மதப் பழக்கவழக்கங்கள், பைபிள் புத்தகத்தை வைத்திருந்ததற்காக ஒரு குடும்பம் கைது செய்யப்பட்டு, இரண்டு வயது சிறுவன் உள்பட அனைவருக்கும் வட கொரியாவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என  அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 27, 2023, 05:24 PM IST
  • வட கொரியாவில் 70,000க்கும் மேலான கிறிஸ்தவர்கள், மற்ற மதத்தினர் சிறையில் உள்ளனர்.
  • வேற்று மதத்தினர் உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்துள்ளனர்.
  • இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கைவிட்டாரா கடவுள்... 2 வயது சிறுவனுக்கு சிறை - வட கொரியாவில் கொடூர சம்பவம்! title=

வட கொரியாவில் பைபிள் உடன் பிடிபட்ட கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்றும், குழந்தைகள் உட்பட அவர்களது குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான வெளியுறவுத்துறையின் சர்வதேச மத சுதந்திர அறிக்கையின்படி, வட கொரியாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைக்கு அனுப்பப்பட்ட பலரில் இரண்டு வயது சிறுவனும் உள்ளார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதப் பழக்கவழக்கங்கள், பைபிள் புத்தகத்தை வைத்திருந்ததற்காக ஒரு குடும்பம் கைது செய்யப்பட்டுள்ளது. இரண்டு வயது சிறுவன் உட்பட அவனின் ஒட்டுமொத்த குடும்பமும் 2009ஆம் ஆண்டில் அரசியல் சிறை முகாமில் அடைக்கப்பட்டது, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ஆயிரக்கணக்கான மர்மமான உயிரினங்கள் கண்டுபிடிப்பு! ஆழ்கடல் அதிசயம்

இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் மோசமான நிலைமைக்கு உள்ளாக்கியுள்ளனர். பல்வேறு வகையில் உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்துள்ளனர். ஷாமானிய ஆதரவாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களில் 90% க்கு அரசின் பாதுகாப்பு அமைச்சகம் பொறுப்பு என்று அறிக்கை கூறியது.

வட கொரியாவில் "நீதியை விரைவுபடுத்தவும், பொறுப்புக்கூறலை ஆதரிப்பதற்காகவும் செயல்படும்" கொரியா ஃபியூச்சர் என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி வெளியுறவுத்துறை, வட கொரிய அரசாங்கம் மத நடைமுறைகளில் ஈடுபடும், மதப் பொருட்களை வைத்திருக்கும், மதத் தொடர்பு கொண்ட நபர்களை துன்புறுத்துகிறது என்று கூறுகிறது.அ

2021ஆம் ஆண்டு டிசம்பரில், கொரியா ஃபியூச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டது, இது வட கொரியாவில் பெண்களுக்கு எதிரான மத சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதை ஆவணப்படுத்தியது. துஷ்பிரயோகத்திற்கு ஆளான 151 கிறிஸ்தவ பெண்களின் நேர்காணலின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. துஷ்பிரயோகத்தின் மிகவும் பொதுவான வடிவங்கள் தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை, நாடு கடத்தல், கட்டாய உழைப்பு மற்றும் பாலியல் வன்முறை என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.

வட கொரியாவில் இருந்து வெளியேறிய பலர், கிறிஸ்தவ மிஷனரிகள் பற்றிய பகுதிகளை உள்ளடக்கிய புத்தகம் ஒன்றில் விவரித்தனர். மிஷனரிகள் செய்ததாகக் கூறப்படும் பல "தீய செயல்கள்" புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. கிறிஸ்துவ குழந்தைகளை தேவாலயங்களுக்கு இழுத்து, பின்னர் அவர்களின் ரத்தத்தை எடுப்பதற்காக அடித்தளத்திற்கு அழைத்துச் செல்வதை சித்தரிக்கும் கிராஃபிக் நாவல்களையும் அரசாங்கம் வெளியிட்டதாக கொரியா ஃபியூச்சரிடம் அங்கிருந்த தப்பித்த கிறிஸ்துவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் நல்ல உறவு இல்லை. டிசம்பரில், வட கொரியாவின் நீண்ட கால மற்றும் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு அமெரிக்கா மற்ற நாடுகளுடன் இணைந்து ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அதிசயம்... ஆனால் உண்மை... முடமானவரை நடக்க வைத்து புது வாழ்வு அளித்த AI...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News