மோடி அரசுக்கு வெற்றி கிடைக்குமா? மசூத் அசார் உலக பயங்கரவாதி என அறிவிக்க வாய்ப்பு!!

IS., அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான ஐ.நா. சபையின் பொருளாதார தடை விதிப்பு குழு கூட்டம் நாளை நடைபெறும் நிலையில், ஜெய்ஷ் –இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், ‘உலக பயங்கரவாதி’ என்று அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Updated: Apr 30, 2019, 07:49 PM IST
மோடி அரசுக்கு வெற்றி கிடைக்குமா? மசூத் அசார் உலக பயங்கரவாதி என அறிவிக்க வாய்ப்பு!!

IS., அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான ஐ.நா. சபையின் பொருளாதார தடை விதிப்பு குழு கூட்டம் நாளை நடைபெறும் நிலையில், ஜெய்ஷ் –இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், ‘உலக பயங்கரவாதி’ என்று அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒவ்வொரு ஐ.நா. கூட்டத்திலும் மசூத் அசாரை உலக பயங்கரவாதி என அறிவிக்கும் முயற்சியை தொடர்ந்து தடுத்து வரும் சீனா, இந்தக் கூட்டத்தில் அவ்வாறு தடுக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

மசூத் அசார் உலக பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டால் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு, உலக அளவில் பொருளாதார, நிதி உதவிகள் அளிப்பதற்கு  தடை விதிக்கப்படும். மேலும் அது பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு பெரும் வெற்றியாக கருதப்படும்.

முன்னதாக புல்வமா தாக்குதலில் சிஆர்பிஎப் படை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தற்கொலைப் படைதான் காரணம் என தகவல்கள் வெளியானது.

புல்வாமா தாக்குதல் நடைப்பெற்ற உடன் இந்த தடைவிதிப்புக் குழுக் கூட்டத்தில்,  மசூத் அசாரை உலக பயங்கரவாதி என அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆதரவுடன் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வந்தது. 

ஆனால் இந்த தீர்மானத்திற்கு ஆட்சேபணை தெரிவித்த சீனா இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க இன்னும் அதிக கால அவகாசம் தேவைப்படுதாக சீனா காரணம் கூறியிருந்தது. சீனா இவ்வாறு தடுப்பது இது 4-வது முறை ஆகும்.

புல்வாமா தாக்குதலுக்கு முன்பாக, கடந்த 2001-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது  நடத்தப்பட்ட தாக்குதல், அதே ஆண்டில் நடைப்பெற்ற காஷ்மீர் சட்டமன்றம் மீதான தாக்குதல், 2016-ஆம் ஆண்டில் பதான்கோட் விமானப் படை தளத்தின் மீதான தாக்குதல் முதலிய தாக்குதல்களில்  மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் தற்போது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத்  அசாரை  உலக பயங்கரவாதி என்று அறிவிக்கும் பிரச்சினையில், ஐ.நா. ஆலோசனைகளில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், முறையாக தீர்வு காணப்படும் என்றும்,  சீன அரசு தெரிவித்துள்ளது. எனவே வரும் ஐநா கூட்டத்தில் மசூத் அசார் பிர்ச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.