Russia vs Ukraine War Live Updates: நெருக்கும் ரஷ்யா - எல்லை முழுவதும் கடும் சண்டை

Russia Ukraine Live Updates இன்று காலையில் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 24, 2022, 07:42 PM IST
    டான்பாஸைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை' எடுக்கப்படுவதாக புடின் அறிவிப்பு
Live Blog

உக்ரேனியப் படைகளை "ஆயுதங்களைக் கீழே போட" வலியுறுத்திய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தாக்குதலை தொடங்கினார். இன்று காலையில் தொடங்கிய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பான உடனடி கள நிலவரத்தை தெரிந்துக் கொள்ள ஜீ தமிழ் நியூஸ் நேரலை பக்கத்தில் இணைந்திருங்கள்.

24 February, 2022

  • 18:30 PM

    ரஷ்யா 203 தாக்குதல்களை நடத்தியுள்ளது: உக்ரைன் போலீசார்
    இன்று இதுவரை ரஷ்யா 203 தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் போலீசார் தெரிவித்தனர், உக்ரைனின் எல்லை முழுவதும் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சண்டை நடந்து வருகிறது.

    கிழக்கு நகரான சுமிக்கு அருகே ரஷ்யப் படைகளுடன் உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருவதாக மாநில எல்லைக் காவலர்கள் தெரிவித்தனர். சில ரஷ்யப் படைகள் கடும் சண்டையில் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் கூறினார். (செய்தி:ராய்ட்டர்ஸ்)

  • 18:30 PM

    உக்ரைனில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

    வியாழனன்று 14 பேரை ஏற்றிச் சென்ற உக்ரேனிய இராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என உக்ரேனிய காவல்துறை மற்றும் அரசு அவசர சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

  • 18:15 PM

    பிரான்ஸ் உக்ரைனுக்கு துணை நிற்கும்:
    கிழக்கு ஐரோப்பிய பகுதியில் ரஷ்யாவின் நடவடிக்கையை கண்டத்த பிரான்ஸ் அதிபத் இம்மானுவேல், "பிரான்ஸ் உக்ரைனின் பக்கம் நிற்கும்" என்றார்.

  • 18:15 PM

    உக்ரேனிய இராணுவம் 4 ரஷ்ய டாங்கிகளை அழித்தது:
    ரஷ்யாவுடனான போரில் கார்கிவ் ரிங் ரோட்டில் 4 ரஷ்ய டாங்கிகள் உக்ரைன் ராணுவத்தால் அழிக்கப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது. 

  • 18:15 PM

    இந்தியர்களை மீட்பதே எங்கள் முன்னுரிமை:
    வெளியுறவுத்துறை அமைச்சருடன் நானும் ஆலோசித்துள்ளேன், உக்ரைன் நிலைமையை கவனித்து வருகிறோம் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். அங்கு வான்வெளி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தவுடன் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்றார்.

  • 18:15 PM

    உக்ரைன் தலைநகரம் கீவ் அருகே உள்ள ராணுவ விமான நிலையத்தில் ரஷ்ய ஹெலிகாப்டர்கள் தாக்குதல்

  • 17:45 PM

    உக்ரைனில் உள்ள பொதுமக்கள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு எதிராக ரஷ்யா 30க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் க்ரூஸ் ஏவுகணைகளும் அடங்கும் என ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 17:30 PM

    உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவத் தலையீட்டைத் தொடர்ந்து, உக்ரைனின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் "அடோல்ஃப் ஹிட்லர் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை காட்டும் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டது. அதில் "இது ஒரு 'மீம்' அல்ல, ஆனால் இது தான் உண்மை" என ட்வீட் செய்துள்ளது.

     

  • 17:15 PM

    உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு, பதற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சிமாநாட்டிற்கு நேட்டோ அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது பாதுகாப்பை வலுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நாளை (வெள்ளிக்கிழமை) நேட்டோவின் 30 உறுப்பு நாடுகளின் அவசர உச்சிமாநாட்டை நடக்கவுள்ளது.

  • 17:15 PM

    இரண்டு ரஷ்ய வீரர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது

  • 16:45 PM

    உக்ரைன் பிரச்சனை குறித்து உ.பி.யில் இருந்து டெல்லி திரும்பிய பிறகு பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்

  • 16:15 PM

    Russia Ukraine Conflict: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல நாட்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே இன்று (வியாழக்கிழமை) காலை போர் தொடங்கியது. காலை முதல் நடைபெற்று வரும் போரில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பலியாகியுள்ளனர். இதனிடையே, ரஷ்யாவிடம் அடி பணிய மாட்டோம் என்றும், உறுதியாகப் போராடுவோம் என்றும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. மேலும் உக்ரைன் தனது குடிமக்கள் அனைவரையும் போருக்கு பங்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

  • 16:15 PM

    உக்ரைன் ராணுவம் இதுவரை ஏழு ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் கூறியுள்ளன. ரஷ்யாவால் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்ட லுஹான்ஸ்க் மாகாணத்தில் ரஷ்யாவின் ஏழாவது போர் விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்தியது எனத் தகவல்

  • 16:15 PM

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் முதல் ஒரு மணிநேரத்தில் 40க்கும் மேற்பட்ட உக்ரைன் படையினரும் சுமார் 10 பொதுமக்களும் உயிரிழந்ததாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் உதவியாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  • 15:45 PM

    உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ட்வீட்: "மாஸ்கோ என்ன நினைத்தாலும்" தனது நாடு அவர்களிடம் தங்கள் சுதந்திரத்தை ஒப்படைக்காது" எனப் பதிவிட்டுள்ளார்.

     

  • 15:45 PM

    எல்லைப் பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் எல்லைக் காவலர்கள் தெரிவித்தனர். ரஷ்ய தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவ தரப்பில் இறப்பு எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளதாகவும்  உக்ரைன் தெரிவித்துள்ளது.

  • 15:45 PM

    "50 ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் கொல்லப்பட்டனர். எங்களுக்கு இழப்புகள் உள்ளன, மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

  • 15:45 PM

    ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலி: சென்னையில் ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்

    சமீபத்திய நிலவரப்படி, ரஷ்யா உக்ரைன் போரின் எதிரொலியாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரணுக்கு ரூ. 1240 உயர்ந்து, ரூ.38,992 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.155 அதிகரித்து ரூ.4,874-க்கு விற்கப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு ரூ.2.7 அதிகரித்து ரூ.71.40-க்கு விற்பனையில் உள்ளது. 

    தங்கத்தின் ஏறுமுகம் தொடரும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள். ரஷ்யா உக்ரைன் விவகாரத்தால், உலக சந்தையில் ஸ்திரமற்ற நிலை உள்ளது. இந்த பதட்டத்தின் முக்கிய தாக்கம் தங்கத்தில் இருக்கக்கூடும். இன்று ரஷ்யா உக்ரைன் மீது முழுமையான தாக்குதலை தொடங்கிவிட்ட நிலையில், இது போருக்கான துவக்கமாக பார்க்கப்படுகின்றது. மேலதிக விவரங்களை இங்கே காணலாம்.  

  • 15:30 PM

    நாட்டைக் காக்க விரும்புவோர் கையில் ஆயுதம் கொடுப்போம். நமது நாட்டை காக்க அனைவரும் தயாராக இருங்கள் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

     

  • 15:30 PM

    ரஷ்ய தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என உக்ரைன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • 15:30 PM

    ரஷ்ய தாக்குதல்கள் தொடரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முக்கிய அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது "ரஷ்யாவிடம் நாங்கள் தலைவணங்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

  • 15:30 PM

    உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தக்க பதிலை அளிப்போம் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது

     

  • 15:15 PM

    உக்ரைன் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த 2320 மாணவர்கள் சிக்கியிருப்பதாகவும் அவர்களது பாதுகாப்பு குறித்த கவலை இருப்பதாகவும் எனவே அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் கடிதம்.

  • 15:15 PM

    கிழக்கு உக்ரைனின் சுகுவிவ் நகரில் ரஷ்ய குண்டுவீச்சு தாக்குதல்களுக்கு மத்தியில் கட்டிடம் தீப்பிடித்ததை அடுத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.

    ரஷ்ய டாங்கிகள் மற்றும் பிற கனரக உபகரணங்கள் பல வடக்குப் பகுதிகளிலும், கிரெம்ளினுடன் இணைக்கப்பட்ட தெற்கில் உள்ள கிரிமியா தீபகற்பத்திலிருந்தும் எல்லையைத் தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • 14:45 PM

    ரஷ்ய அதிபர் புடினிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசி போரை நிறுத்த வேண்டும்

    இந்த போரை நிறுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புடினிடம் பேச வேண்டும் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் கேட்டுக் கொண்டார்.

    சில இடங்களில் சண்டை நடந்து வருகிறது என்று கூறிய ரஷ்ய தூதர், ரஷ்யாவின் இரண்டு டாங்கிகள் மற்றும் பல டிரக்குகளை உக்ரைன் அழித்ததாக தெரிவித்தார்.  

    எல்லைப் பகுதியில், உக்ரேனின் சோதனைச் சாவடிகள் மற்றும் எல்லைச் சாவடிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது என்று அவர் தெரிவித்தார்.

    உக்ரைன் தரப்பு, 5 ரஷ்ய போர் விமானங்கள், 2 ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்திருப்பதாகவும் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் தெரிவித்தார்.

  • 14:30 PM

    உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு இயக்கி வந்த சிறப்பு விமானங்களை இந்தியா ரத்து செய்தது

    சிவிலியன் விமானங்களுக்காக உக்ரைன், தனது வான்வெளியை மூடியதால், இந்தியா இயக்கி வந்த சிறப்பு விமானங்கள் இனிமேல் செயல்படாது.

    உக்ரைனில் வசிக்கும் இந்திய குடிமக்களை வெளியேற்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களில் உதவி தேவைப்படுபவர்கள், இந்திய தூதரக இணையதளம், சமூக ஊடகங்களை  பின்தொடரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    தலைநகரின் புறநகர்ப் பகுதிகளில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார்.

  • 13:45 PM

    ரஷ்யா மீதான தடைகளை பரிசீலிக்கும் ஐ.நா ஆணையம் 

    ரஷ்யா மீதான தடைகள் தொடர்பாக ஐரோப்பிய ஆணையம் இன்னும் சற்று நேரத்தில் வரைவு அறிக்கையை அனுப்பும். இதற்கு ஐரோப்பிய தலைவர்களின் ஒப்புதல் கிடைத்த உடனே, தடைகள் விதிக்கப்படும். 

    WORLD
    ரஷ்யா மீது தடைகள் அமலுக்கு வந்தால், அந்நாடு, முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைகளுக்கான அணுகலைத் தடுக்க முடியும். இது, ரஷ்யப் பொருளாதாரத்தின் மூலோபாயத் துறைகளை குறிவைக்கும் தடைகளாக இருக்கும் என: ஐரோப்பிய ஆணையத் தலைவர், உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.

  • 13:45 PM

    உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ராணுவ நடவடிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை அறிவித்ததோடு, ரஷ்ய நடவடிக்கையில் தலையிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதன் மூலம் மூன்றாம் உலக போரை நோக்கி உலகம் செல்கிறதா என்ற அச்சம் நிலவுகிறது...

    மேலும் விபரங்களுக்கு இங்கே காணவும்.....

     

  • 13:45 PM

    இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலிக்கும் ரஷ்யா - உக்ரைன் மோதல்

    மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 2,070 புள்ளிகள் சரிந்து 55,160 புள்ளிகளாக வீழ்ந்தது; தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 635 புள்ளிகள் சரிந்து 16, 427 புள்ளிகளாக இருக்கிறது.

  • 13:15 PM

    டாலருக்கு எதிரான ரஷ்ய ரூபிள் 9% சரிந்தது 

    உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, டாலருக்கு எதிரான ரஷ்ய ரூபிள் 9% சரிந்தது. இதற்கிடையில், மாஸ்கோவின் பங்குச் சந்தை நிர்வாகம், வியாழக்கிழமை பங்குச்சந்தையின் வர்த்தகம் நிறுத்தப்படுவதாக கூறியது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனில் ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்தது.

  • 13:00 PM

    உக்ரைன் நாட்டின் அதிபர் Volodymyr Zelenskyy உடன் பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்,

    WORLD

    ரஷ்ய இராணுவப் படைகளின் இந்த நியாயமற்ற தாக்குதலை நான் கண்டித்தேன். இன்றிரவு UNSC யில் சர்வதேச கண்டனத்தைத் திரட்ட நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கினேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

  • 13:00 PM

    உக்ரைனில் இருக்கும் கேரள மாணவர்கள் பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன்

    ‘உக்ரைனில் போர் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் உள்ளனர். இதுபற்றி ஏற்கனவே மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுத்து வருகிறோம். நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசை கேட்டுக்கொள்வோம்’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் கூறினார்.

  • 12:30 PM

    பாதுகாப்புக் காரணங்களுக்காக உக்ரைனில் தூதரங்கள் மூடல்

    பாதுகாப்புக் காரணங்களுக்காக உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள தூதரகத்தை மூடுவதாக டென்மார்க் அறிவித்துள்ளது.

    இந்த செய்தியை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம், தனது வலைப்பக்கத்தில் அறிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • 12:30 PM

    லுஹான்ஸ்க் பகுதியில் 2 நகரங்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு வந்தது

    ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

    ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியது தொடர்பாக நேட்டோ அமைப்பு ஆலோசினைகளை மேற்கொண்டுள்ளது.  

    அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ என்ற வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு, துருப்புகளை ரஷ்யா எல்லை நோக்கி நகர்த்தியிருக்கிறது

  • 12:15 PM

    உக்ரைன் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

    வேகமாக மாறிவரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியர்களின், குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துகிறோம். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

     

    "உக்ரைன் விமான தளங்கள், வான் பாதுகாப்புகளை அழித்ததாக ரஷ்யா கூறுவதாக செய்தி நிறுவனங்களை மேற்கோள் காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.

  • 11:45 AM

    ரஷ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர்

    லுகான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவின் 5 போர் விமானங்களையும் 1 ஹெலிகாப்டரையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக ரியாட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

  • 11:45 AM

    சிவிலியன் விமானங்கள் பறப்பதற்கான அனுமதியை உக்ரைன் ரத்து செய்தது

    கிழக்கு உக்ரைன் உட்பட கார்கிவ் பகுதியில் பலத்த வெடி சத்தம் கேட்டதை அடுத்து உக்ரைன் சிவிலியன் விமானங்கள் பறப்பதற்கான அனுமதியை ரத்து செய்தது. 

    உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடிருந்த ஏர் இந்திய விமானம் AI1947 பயணிகளை அழைத்து வர முடியாமல் திரும்பிய நிலையில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களின் நிலை குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.  

    மரியுபோலில் வெடிகுண்டு முழக்கங்கள் தொடங்கியதுமே, உக்ரைனின் "வான் பாதுகாப்பு முடக்கப்படும்" என்று ரஷ்யா கூறியது குறிப்பிடத்தக்கது.

  • 11:30 AM

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா, தனது கவலையை பதிவு செய்துள்ளது. 

    ரஷ்யா-உக்ரைன் இடையேயான பதற்றம் சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை உருவாக்கும் அபாயத்தில் உள்ளதாக ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது

  • 11:15 AM

    உலக நாடுகள் உடனடியாக செயல்பட வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ரஷ்யா மீது பேரழிவு மற்றும் தடைகளை அறிவித்து, அனைத்து விதங்களிலும்,ரஷ்யாவை முழுமையாக தனிமைப்படுத்துங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    உக்ரைனுக்கான ஆயுதங்கள், உபகரணங்கள். நிதி மற்றும் மனிதாபிமான உதவி என அனைத்தையும் தடை செய்யவேண்டும் என்றும், ஐரோப்பா மற்றும் உலகின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது என்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    WORLD

  • 10:45 AM

    ஐ.நா அவசரகால பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதர், உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் இராணுவ நடவடிக்கையானது, கிய்வில் அதிகாரத்தில் உள்ள "அரசு ஆட்சியை" குறிவைத்ததிருப்பதாக  கூறினார்.

    "உக்ரேனிய மக்களுக்கு எதிராக நாங்கள் ஆக்ரோஷமாக செயல்படவில்லை, ஆனால் கிய்வில் அதிகாரத்தில் இருக்கும் இராணுவ ஆட்சிக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்" என்று ரஷ்ய தூதர் கூறினார்.

  • 10:15 AM

    இந்திய மாணவர்கள் தாயகம் திரும்புகின்றனர். உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

    உக்ரைனில் கல்வி பயின்று வரும் மாணவர்களை நாடு திரும்புமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியதை அடுத்து, இந்தியாவிற்கு மாணவர்கள் திரும்பி வருகின்றனர். நிலைமை தீவிரமடையலாம் என்பதால், சில நாட்களுக்கு முன்னரே, சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்கத் தொடங்கியது.

  • 10:15 AM

    உக்ரைன் தலைநகர் கீவ்-இல் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா படைகள் முயற்சி செய்து வருகின்றன. ரஷ்ய விமானப்படை இன்னும் சில மணிநேரங்களில் விமான நிலையங்களை கைப்பற்றலாம் என்று கூறப்படுகிறது.

  • 10:00 AM

    உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலினால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு அந்த நாடு மட்டுமே பொறுப்பாகும், மேலும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றுபட்ட மற்றும் தீர்க்கமான வழியில் ரஷ்யாவுக்கு பதிலளிப்பார்கள் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க அரசு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

  • 09:45 AM

    ரஷ்ய இராணுவப் படைகளின் நியாயமற்ற தாக்குதலால் அச்சமடைந்திருக்கும் உக்ரைன் மக்களுக்காக உலகமே பிரார்த்திக்கிறது. அதிபர் புடின் ஒரு பேரழிவு உயிர் இழப்பு மற்றும் மனிதகுலத்திற்கே துன்பத்தை கொண்டு வரும் திட்டமிடப்பட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார் என அமெரிக்க அதிபர் புடின் டிவிட்டர் செய்தியில் தனது கவலைகளை பகிர்ந்துள்ளார்.

  • 09:45 AM

    உக்ரைனில் வசிக்கும் தமிழர்களை மீட்பதற்கு மாநில அரசு அவசர உதவி மையங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பிரத்யேக  தொலைபேசி எண்களை அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்தது

    044-28515288, 9600023645 அல்லது 9940256444 என்ற தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். 

    https://nrtamils.tn.gov.in என்ற வலைத்தளத்தில் தங்களது விவரங்களை தெரிவிக்கலாம்.

     

  • 09:30 AM

    உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பாக நடைபெறும் ஐநா அவசர கூட்டத்தில் பேசிய உக்ரைன் நாட்டு பிரதிநிதி, போரை நிறுத்துவது இந்த அமைப்பின் பொறுப்பு என்று கேட்டுக் கொண்டார். மேலும், "உங்கள் நாட்டு அதிபர் போருக்கு அழைப்பு விடுக்கும் வீடியோவை நான் காட்டட்டுமா?" என்று ரஷ்ய பிரதிநிதியிடம் கேள்வி எழுப்பினார்.

    WORLD  

     

Trending News