லண்டன்: லண்டனின் பிரபலமான சின்னமாக விளங்கும் பிக் பென் (Big Ben) இருக்கும் எலிசபெத் கோபுரத்தின் உச்சியை மறைத்திருக்கும் சாரக்கட்டு, மூன்று ஆண்டுகால விரிவான புனரமைப்பிற்குப் பிறகு தற்போது அகற்றப்படவுள்ளது.
கோபுரத்தின் மேற்புறத்தை தற்போது மீண்டும் அனைவராலும் காண முடியும். புனரமைப்புப் பணிகளுக்காக இப்பகுதி நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்தது.
சாரக்கடையை முழுவதுமாக அகற்றுவதற்கு ஆறு வாரங்கள் ஆகும். அதற்குப் பிறகு புனரமைக்கப்பட்ட கூபுர உச்சியை காண முடியும். புதுப்பிப்பு பணிகளின் ஒரு பகுதியாக இடிந்து விழுந்த கல் வேலைகள் மற்றும் கசிவுகளும் சரி செய்யப்பட்டன.
இதைப் பற்றி தெரிவித்த ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சபாநாயகர் லிண்ட்சே ஹாய்ல் ஒரு அறிக்கையில் கூறியதாவது: "எல்லோரையும் போலவே, எலிசபெத் கோபுரத்தின் (Elizabeth Tower) சாரக்கட்டு எடுக்கப்படும் நாளை நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் – ஆகையால் கோபுர உச்சியை மீண்டும் திறக்கும் நாள் ஒரு ஒரு மறக்கமுடியாத தருணமாக இருக்கும்.”
"இந்த COVID-19 தொற்று காலத்தில், இப்படிப்பட்ட சிறிய நல்ல விஷயங்கள் நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆகையால் இதைக் காண அனைவரும் உற்சாகமாக உள்ளார்கள்” என்றும் அவர் மேலும் கூறினார்.
"எங்கள் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அடையாளமான கோபுரத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் புதுப்பிப்புப் பணிகள், லண்டனின் (London) முக்கிய கட்டிடங்களின் வரிசையில் இந்த கட்டிடமும் இன்னும் பல தலைமுறைகளுக்கு இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது” என்றார் அவர்.
எலிசபெத் கோபுரத்தின் நான்கு ஆண்டு மறுசீரமைப்பு திட்டப் பணிகள் 2017 இல் தொடங்கியது என்று ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில், புதுப்பித்தல் செலவு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உயர்ந்து 79.7 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது என தெரியவந்தது.
ALSO READ: மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் முதலைகளை பிடிக்க ஆட்கள் தேவை..!
எலிசபெத் கோபுரத்தில் (Elizabeth Tower) கல்நார், மாசு மற்றும் விரிவான இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு சேதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
கோபுரத்தின் வெளிப்புறத்தில் உள்ள நான்கு கடிகார டயல்களில் மொத்தம் 1,296 தனித்தனி கண்ணாடி துண்டுகள் உள்ளன. மறுசீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக அவை ஒவ்வொன்றும் மாற்றப்பட வேண்டும்.
12 டன் எடையுள்ள கடிகாரம் அகற்றப்பட்டு, ஒரு முழுமையான மாற்றத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
எலிசபெத் கோபுரம் (Elizabeth Tower) பெரும்பாலும் பிக் பென் என்று தவறாக அழைக்கப்படுகிறது. ஆனால் ‘பிக் பென்’ என்ற பெயர் அதன் ஒரு பகுதியை ஆக்கிரமிக்கும் மணியை மட்டுமே குறிக்கிறது.
இது முன்னர் ‘க்ளாக் டவர்’ அதாவது கடிகார கோபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் 2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்து ராணியின் வைர விழாவைக் குறிக்கும் வகையில் ராணியின் நினைவாக இதற்கு மறுபெயரிடப்பட்டது.
ALSO READ: எச்சரிக்கை!! குழாய் நீரை பருகினால் உயிரே போகும் ஆபாயம்... ஆய்வாளர்கள் பகீர்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR