ஹிஜாபை எரித்து, தலைமுடியை வெட்டி எதிர்ப்பு - ஈரான் இளம்பெண் மரணத்திற்கு கடும் போராட்டம்

ஈரானில் ஷரியா (இஸ்லாமிய) சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 22 வயது இளம்பெண் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும் அந்நாட்டு பெண்கள் உள்பட பலரும் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 19, 2022, 01:43 PM IST
  • 22 வயதான மாஷா அமினி போலீசாரால் அடித்தே கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.
  • ஈரானில் 7 வயதிற்கு பிறகு பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும்.
  • ஈரானில் இஸ்லாமிய சட்டத்தை மீறினால் கடும் தண்டனை.
ஹிஜாபை எரித்து, தலைமுடியை வெட்டி எதிர்ப்பு - ஈரான் இளம்பெண் மரணத்திற்கு கடும் போராட்டம் title=

ஹிஜாபை முறையாக அணியதாததால் தலைமுடி வெளியே தெரிந்ததாகக் கூறி, 22 வயதான இளம்பெண்ணை அந்நாட்டு போலீசார் விசாரணையின்போது அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஈரானிய பெண்கள் தங்களின் ஹிஜாப்களை எரித்தும், தலைமுடியை வெட்டியும் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

22 வயதான மாஷா அமினி, ஈரானின் காவலர்களால், ஹிஜாபை முறையாக அணியவில்லை என்பதால் கைதாகியுள்ளார். போலீசார் விசாரணையை அடுத்து நீண்ட நாள்களாக கோமாவில் இருந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை (செப். 16) உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, பெண்கள் உரிமை சார்ந்து ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது. 

மேலும் படிக்க | 'மூடாதே, மூடாதே... பள்ளிகளை மூடாதே...' தாலிபன்களை எதிர்த்து மாணவிகள் போராட்டம

விசாரணையின்போது, மாஷா அமினியை போலீசார் கடுமையாக தாக்கியதில்தான் அவர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பரவலாக தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்தை மறுத்துள்ள போலீசார் தரப்பு, கைது செய்யப்பட்டபின்னர் அங்கிருந்த பெண்களுடன் இருந்தபோது, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என தெரிவித்துள்ளனர். 

ஆனால், போலீசாரின் கருத்தை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபவர்களை போலீசார் கண்ணீர் வெடிகுண்டு வீசி கலைக்கும் காட்சிகளும் வீடியோக்களில் காட்டப்படுகின்றன. அந்த வகையில், பெண்கள் தங்களின் 7 வயதில் இருந்து ஹிஜாப் அணிய வேண்டும் என்ற ஈரானிய சட்டத்தை எதிர்க்கும் விதமாக பெண்கள் தங்களின் தலைமுடியை வெட்டி, ஹிஜாபை பொதுவெளியில் எரித்து வருகின்றனர். இதனை சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பதிவிட்டும் வருகின்றனர். 

ஈரானிய ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான மசிஹ் அலினெஜாட் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்நாட்டு பெண்களின் ஹிஜாப் எரிப்பு, தலைமுடி வெட்டுதல் ஆகிய வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும், அதில்,"தங்களின் முடியை வெட்டியும், ஹிஜாபை எரித்தும், மாஷா அமினி கொலை செய்த ஹிஜாப் போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

7 வயதில் இருந்து நாங்கள் எங்களின் தலைமடியை முறையாக மறைக்காவிட்டால் எங்களால் பள்ளிக்கோ அல்லது வேலைக்கோ செல்ல முடியாது. இந்த பாலின நிறவெறி ஆட்சியால் நாங்கள் மிகவும் மன உளச்சலில் இருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், மற்றொரு ட்வீட்டில், அமினி கொலைக்கு எதிராக போராடுபவர்களை போலீசார் கடுமையாக தாக்கும் வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார். 

ஈரானின் ஷரியா (இஸ்லாமிய) சட்டத்தின்கீழ், பெண்கள் தங்கள் தலைமுடியை மறைக்க வேண்டும். நீண்ட, தளர்வான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். இதனை மீறினால் பொதுவெளியில் தண்டனை, அபராதம் அல்லது கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆனால், சமீப காலங்களில் இந்த சட்டத்தை எதிர்க்கும் வகையில் பெண்கள் ஹிஜாபை துறக்க வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Netflix நிறுவனத்தை எச்சரிக்கும் வளைகுடா நாடுகள்... காரணம் என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News