11 நாட்களுக்கு ஒட்டு துணி போட வேண்டாம்! அடடா..சொகுசு கப்பலில் ராஜ வாழ்க்கை!

Latest News Big Nude Boat : மையாமிக்கு செல்லும் ஒரு சொகுசு கப்பலில் பயணித்தால், 11 நாட்களுக்கு ஒட்டுதுணி கூட போட வேண்டாமாம். இதை கேட்ட மக்கள் “இது என்ன புதுசா இருக்கு” என யோசித்து வருகின்றனர்.   

Written by - Yuvashree | Last Updated : May 4, 2024, 03:52 PM IST
  • 11 நாட்கள் நிர்வ்வாணம்
  • சொகுசு கப்பலில் ராஜ வாழ்க்கை
  • 2,500 பேர் வரை பயணிக்கலாம்
11 நாட்களுக்கு ஒட்டு துணி போட வேண்டாம்! அடடா..சொகுசு கப்பலில் ராஜ வாழ்க்கை! title=

Latest News Big Nude Boat : நமக்கெல்லாம் சொகுசு கப்பல் என்ற பெயரை கேட்டவுடன் நினைவிற்கு வருவது, ‘டைட்டானிக்’தான். டைட்டானிக் போன்ற சொகு கப்பல்கள், சுற்றுலா பயணிகள் பலரை ஏற்றிக்கொண்டு பல நாட்கள் கடலில் பயணம் செய்யும். இந்த கப்பல்களுக்குள்ளேயே நீச்சல் குளம், அழகான ரூம்கள், பார்டி செய்வதற்கு ஏற்ற இடம், பயணிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்துவதற்காக எந்த விஷயம் வேண்டுமானாலும் செய்யப்படலாம். ஆனால், இப்படி 11 நாட்கள் நிர்வாணமாக கூட இருக்கலாமா? 

11 நாட்கள் நிர்வாணமாக..

சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்தும் இந்த கப்பல், அடுத்த ஆண்டு தன் பயணத்தை தொடங்க இருக்கிறது. மனிதனை, இயற்கையோடு இணைக்கும் நோக்கில், இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறாதாம். 

இந்த நிர்வாண கப்பல், அடுத்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கடலில் பயணிக்க இருக்கிறது. கரீபியன் கடல்ல் பயணிக்கும் இந்த படகில் பயணிக்க விரும்புபவர்கள், இதில் பயணிக்கும் போது ஒட்டு துணி கூட போட வேண்டாம். இந்த கப்பல், பஹாமாஸ், பியோர்டோ ரிகோ உள்ளிட்ட இடங்களில் பயணிக்க உள்ளது. 

மேலும் படிக்க | மாரடைப்பால் உயிரிழந்த 6 வயது குழந்தை! கொடூர தந்தை கைது..நடந்தது என்ன?

நம் ஊரில்தான், வெயிலை பார்த்தால் நடுங்கி ஓடுகிறோம். ஆனால், ஒரு சில வெளிநாட்டினருக்கு வெயிலை காண்பது ஏதோ ஒரு பெரிய பொக்கிஷத்தை காண்பது போன்றதாகும். வெயில் காலம் வந்தாலே, அக்கடாவென அனைத்தையும் கழற்றி போட்டு விட்டு, பிக்கினி உடையில் கடற்கறையில் சன்ஸ்கரீனை தேய்த்துக்கொண்டு படுத்து விடுவர். இதை ஒரு படி மேலே கொண்டு போகும் வகையில்தான், இந்த முயற்சியும் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் 11 நாட்கள் நிர்வாணமாக இருந்தாலும், ஒரு சில நேரங்களில் மற்றும் இடங்களில் மட்டும் இதற்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அது என்ன தெரியுமா? 

கப்பலில் இருக்கும் விதிமுறைகள்:

>கப்பலில் நிர்வாணமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இது, தனி நபரின் விருப்பம்தான். 

>டைனிங் ரூம், டின்னர் சாப்பிடும் சமயங்களில் உடை உடுத்தியிருக்க வேண்டும்.

>கப்பலின் ஒரு சில இடங்களில் துண்டுடன் இருக்கலாம்.

>இந்த கப்பலில் 2,300 சுற்றுலா பயணிகள் வரை பயணம் செய்யலாம்.  

>இந்த கப்பலின் பெயர், Norwegian Pearl. ஆனால் இதனை பலர் பெரிய நிர்வாண கப்பல் (Big Nude Boat) என்று பலர் அழைக்கின்றனர். 

உங்களுக்கும் வெளிநாட்டினரை போல, “சுதந்திரமாக” இருக்க வேண்டும் என்று விரும்பினால், நீங்களும் அடுத்த வருடம் இந்த கப்பலில் பயணம் செய்யுங்கள். 

மேலும் படிக்க | 25 கன்னிப் பெண்கள்... இந்த காலத்திலும் அந்தப்புரம் - வடகொரிய அதிபரின் சேட்டை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News