மணிலா: இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அழகி ஐரிஷ் மிட்டனேரேவுக்கு வெற்றி மகுடம் சூட்டப்பட்டிருக்கிறது. இதில் 13 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஹைத்தியைச் சேர்ந்த அழகி ஜாக்வெல் பெலிச்சியர் அடுத்த நிலையிலும் கொலம்பியாவைச் சேர்ந்த அழகி ஆண்ட்ரியா டோவர் மூன்றாவது நிலையிலும் வந்தனர்.
வெற்றி பெற்ற தருணத்தின் வீடியோ காட்சி பார்க்க:-
We have our Miss Universe 2016! Congratulations Miss France. #MissUniverseOnZCafe pic.twitter.com/zvvuJXBsQ8
— Zee Cafe (@ZeeCafe) January 30, 2017
பிரபஞ்ச அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று பிலிப்பீன்சிலிருந்து உலகெங்கும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 2015-ம் ஆண்டின் போட்டி முடிவைத் தவறாக அறிவித்த அறிவிப்பாளர் ஸ்டீவ் ஹார்வி, போட்டியின் அறிவிப்பாளாக இம்முறை மீண்டும் அங்கம் வகித்தார்.
பிரபஞ்ச அழகியாக பட்டம் சூட்டப்பட்ட மிட்டனரே, பெர்சியா வம்சாவளியைச் சேர்ந்தவர். தற்போது பல் அறுவை சிகிச்சை குறித்த பட்டப்படிப்பை படித்து வருகிறார்.தன்னுடைய பிரபஞ்ச அழகி பட்டத்தின் மூலம், பற்கள் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.