News Tidbits: முக்கியச் செய்திகளின் செய்திக் கதம்பம் உங்களுக்காக...

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். காவல்துறையினரின் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2020, 10:00 PM IST
News Tidbits: முக்கியச் செய்திகளின் செய்திக் கதம்பம் உங்களுக்காக... title=

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். காவல்துறையினரின் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோடுடன் நவ்ஷெரா பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பாகிஸ்தான் மீறியது. தூண்டலற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இந்தியா வலுவான பதிலை அளித்தது.
1000 கோடி ரூபாய் ஹவாலா மோசடி! ஒரு சீனர் மற்றும் சிலர் மீது ED வழக்குப் பதிவு.
வங்கிகளில் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் முதியவர்கள் கவலை. பணவீக்கத்தைத் தாண்டி பலன் தரும் முதலீடு எது என்று ஆதங்கம்...

இடைவிடாத மழையால் தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு. இரண்டு மாநிலங்களிலும் முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% ஆக சுருங்கிவிட்டது. இது மேலும் குறையலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் கண்ட மிக மோசமான இந்த மந்தநிலைக்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்று தான்.

நியூசிலாந்தில் கோவிட்19 தொற்று மீண்டும் ஏற்பட்டிருப்பதால் நாடாளுமன்றத் தேர்தல் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இந்த முடிவை அறிவித்தார். 

மதுக்கடைகளில் கொரோனா இல்லை என்பதால் சென்னையில் டாஸ்மாக் திறப்பு: அரசிடம் கேள்வி கேட்கிறா மக்கள் மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன். "சாராய அணைக்கட்டின் மதகுகள் நாளை திறக்கப்படுகிறதா? இது எந்தவிதத்தில் சரி என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Read Also | வெள்ளி முகக்கவசம் அணிந்து அன்னை துர்கை கோவிட் -19 இன் தாக்கத்தை உணர்த்தும் அற்புதம்!

Trending News