காசு என்னுது இடம் உன்னுது - இலங்கைக்கு தூது விட்ட நித்தியானந்தா

தனக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டுமென்று நித்தியானந்தா இலங்கைக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 3, 2022, 10:57 AM IST
  • நித்யானந்தா கைலாசா நாட்டை உருவாக்கியிருக்கிறார்
  • அதிபர் என்றும் அறிவித்துக்கொண்டார்
  • தற்போது இலங்கையிடம் உதவி கேட்டிருக்கிறார்
 காசு என்னுது இடம் உன்னுது - இலங்கைக்கு தூது விட்ட நித்தியானந்தா

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா சர்ச்சையின் முழு வடிவம். நம் நாட்டில் பல பாலியல் புகார்களிலும், சர்ச்சைகளிலும் சிக்கிய நித்தியானந்தா இங்கு இருந்தால்தானே பிரச்னை என்று முடிவு செய்து கைலாசா என்ற தனி நாட்டினை உருவாக்கி அங்கு தற்போது இருக்கிறார். நாட்டுக்கு அதிபர் என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட நித்தியானந்தா, கைலாசா நாட்டுக்கென்று தனி நாணயம், விசா என்று அதகளம் செய்தார். அதுமட்டுமின்றி கைலாசாவில் தொழில் தொடங்க வருபவர்களுக்கான் விசா இலவசம் என்று அறிவித்தார். கைலாசாவில் நித்தியானந்தாவுடன் பலர் இருக்கின்றனர். அங்கிருந்து புகைப்படத்தையும், வீடியோக்களையும் வெளியாவது வழக்கமாக இருக்கிறது.

மேலும் படிக்க | "ஹார்ட்ஸ் 100" திட்டத்தின் கீழ் 100 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை!

இந்நிலையில் இலங்கையிடம் மருத்துவ உதவி கேட்டு நித்தியானந்தா கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “தமக்கு உடல்நலம் சரியில்லை. எனவே அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது. சிகிச்சைக்கான செலவு மற்றும் அனைத்து மருந்துகளுக்குமான செலவு ஆகியவைகளை தனது சொர்க்க பூமியான கைலாசம் ஏற்றுக்கொள்ளும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | தமிழக பாஜக பட்டியலின அணி மாநில பொருளாளர் பிரபல ரவுடி பி.பி.ஜி.டி. சங்கர் கைது

இதற்கிடையே, நித்தியானந்தாவுக்கு உடல்நலம் சரியில்லை என்றும், அவர் சமாதி நிலையை அடைந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் சில நாள்களிலேயே, தனக்கு ஒன்றும் இல்லை திரும்பவும் வந்துவிட்டேன் என நித்தியானந்தா தன் கைப்பட எழுதி அதன் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

 

முன்னதாக, பழமையான கலாசாரம், இந்துக்களுக்கான முதல் நாடான கைலாசா நாடு; மத சுதந்திரம் மற்றும் மற்ற உரிமைகள், இளைஞர்களுக்கான தலைமை, கல்வி, கல்வி உரிமை பரிமாற்றம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட உறவுகளின் கீழ் கானாவில் உள்ள எப்புடு மாவட்டத்துடன் தொடக்க உறவில் இருக்கிறது என்று கைலாசா சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆளுநர் ரவிக்கு மூத்த வழக்கறிஞர் துரைசாமி அனுப்பிய மனுவால் பரபரப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

More Stories

Trending News