ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு ன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பெயரில் கரோலின்ஸ்கா ஆய்வு மையம் நோபல் பரிசு வழங்குகிறது.
2016-ம் ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசை பிரான்சின் ஜான் பெர்ரி சாவேஜ் , அமெரிக்காவின் ப்ரேசர் ஸ்டோடர்ட், நெதர்லாந்தின் பெர்னார்ட் பெரிங்காவுக்கும் என மொத்தம் 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று பேர் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் தெளலஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டங்கன் ஹால்டேன், பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் மருத்துவ நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு ஜப்பான் நாட்டின் டோக்கியோ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் விஞ்ஞானி யோஷினோரி ஒஷுமி தேர்வு செய்யப்பட்டார்.
BREAKING NEWS 2016 #NobelPrize in Chemistry to Jean-Pierre Sauvage, Sir J. Fraser Stoddart and Bernard L. Feringa pic.twitter.com/buInkIc1KC
— The Nobel Prize (@NobelPrize) October 5, 2016