Noland Arbaugh First Tweet Using Neuralink: உலக செல்வந்தர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் Tesla கார் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகின்றன. கடந்தாண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அதற்கு X என பெயர் மாற்றம் செய்தார். இப்படி எலான் மஸ்க் குறித்து தொடர்ந்து செய்திகள் வருவதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
அந்த வகையில், எலான் மஸ்க்கின் நியூராலிங்க் என்ற நிறுவனமும் உலகளவில் பலரின் கவனத்தை கவர்ந்தது எனலாம். இதில் நிறுவனம் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தி, அதில் அவர்கள் சிந்திப்பதன் மூலமே கணனிகளை இயக்குவது குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதில் 29 வயதான மனிதர் ஒருவரின் மூளையில் கடந்த சில நாள்களுக்கு முன் வெற்றிகரமாக சிப்பையும் பொருத்திவிட்டனர்.
நியூராலிங்க் நிறுவனத்தின் குறிக்கோள்
29 வயதான நோலண்ட் அர்பாக், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் இவருக்கு முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. 2016ஆம் ஆண்டு கோடைக்காலதில் அவர் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சியில் ஆலோசகராக பணியாற்றி வந்தார். அப்போது டைவிங் அடித்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரின் கைகள், கால்கள் என அனைத்தும் முடங்கியது. அந்த வகையில் தற்போது நியூரோலிங்க் மூலம் அவர் சிந்திப்பதன் மூலமே கணினியை இயக்க வழிவகை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | எலோன் மஸ்க், அம்பானி எல்லாம் நெருங்க முடியாது... உலகின் பணக்கார பெண்மணி இவர் தானாம்!
இந்த தொழில்நுட்ப நிறுவனத்தை எலான் மஸ்க் தொடங்கிய நிலையில், அவர் இந்நிறுவனம் குறித்து கூறுகையில், கர்ப்பப்பை வாய் முதுகுத் தண்டு குறைபாடு அல்லது குவாட்ரிப்லீஜியா போன்ற கடுமையான உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். சக்கலான நரம்பியல் நிலைமைகளைச் சமாளிக்க மனித மூளைகளை கணினிகளுடன் இணைப்பதே நிறுவனத்தின் குறிக்கோள் எனவும் குறிப்பிடுவார்.
முதல் ட்வீட்...
அந்த வகையில், நோலண்ட் அர்பாக் வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் நடந்துள்ளது. நோலண்ட் மனதில் மட்டும் நினைத்து X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதவிட்டுள்ளார். இதன்மூலம், நியூரோலிங்க் சிப் மூலம் எண்ணங்கள் வழியாக ட்வீட் செய்த முதல் மனிதர் என்ற பெருமையை நோலண்ட் அர்பாக் பெற்றுள்ளார். இவர் அந்த ட்வீட்டில்,"ட்விட்டர் என்னை ஏஐ பாட் என நினைத்து தடை செய்துவிட்டது.
Twitter banned me because they thought I was a bot, @X and @elonmusk reinstated me because I am.
— Noland Arbaugh (@ModdedQuad) March 22, 2024
X தளமும், எலான் மஸ்க்கும் நான் மனிதன் என்பதால் இங்கு அனுமதித்துள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவை பகிர்ந்த எலான் மஸ்க்,"நியூராலிங்க் டெலிபதி சாதனத்தை பயன்படுத்தி நினைத்தாலே மட்டுமே பதிவிடப்பட்ட முதல் ட்வீட்" என பதிவிட்டுள்ளார். சமீபத்தில், நோலண்ட் அர்பாக்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
First ever post made just by thinking, using the @Neuralnk Telepathy device! https://t.co/mj8GfiuDcD
— Elon Musk (@elonmusk) March 22, 2024
முன்னதாக, நோலண்ட் அர்பாக் வீடியோ கேம்ஸ் மற்றும் ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவதை நியூராலிங்க் நேரலையில் ஒளிப்பரப்பினர். அந்த நேரலையில், எவ்வித பொருள்களும் இல்லாமல் கணினியின் கர்ஸரை சிந்தனை மூலமே நோலண்ட் நகர்த்தினார். இதுகுறித்து அவர் விவரிக்கும்போது அந்த கர்ஸர் எங்கு நகர வேண்டும் என்றே தான் சிந்தித்ததாகவும், அந்த கர்ஸர் அதேபோல் நகர்ந்தது எனவும் கூறினார். நான் வீடியோ கேம்ஸ் விளையாடுவதை விட்டுவிட்டேன். ஆனால், நீங்கள் (நியூராலிங்க்) எனக்கு விளையாடும் வாய்ப்பு கொடுத்தனர், தற்போது 8 மணிநேரம் தொடர்ந்து விளையாடினேன்" என்றார்.
மேலும் படிக்க | மனித மூளையில் சிப்... எண்ணங்களால் கணிணி மவுஸை இயக்கும் பக்கவாத நோயாளி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ