Kim Ju-ae: இந்த பேரு இருந்தா ஒரு வாரத்துக்குள்ள மாத்திடுங்க! இல்லைன்னா சட்டச்சிக்கல்!

Name Control By Kim: Kim Ju-ae என்ற பெயர் இருப்பவர்கள், பெயரை ஒரு வாரத்திற்கு மாற்றி விட்ட வேண்டும் என பெயருக்கும் தடை விதித்துள்ளது வட கொரிய அரசு! இது அந்நாட்டு அதிபரின் மகள் பெயர். இந்த பெயர், வேறு யாருக்கும் இருக்கக்கூடாதாம்!  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 16, 2023, 05:52 PM IST
  • வடகொரிய அதிபரின் மகளின் பெயர் இருந்தால் தொலைஞ்சீங்க
  • பெயர் வைத்துக் கொள்ளவும் கட்டுப்பாடு விதிக்கும் வடகொரியா
  • வடகொரிய தலைவர்களின் பெயரை யாரும் தங்களுக்கு வைக்கக்கூடாது
Kim Ju-ae: இந்த பேரு இருந்தா ஒரு வாரத்துக்குள்ள மாத்திடுங்க! இல்லைன்னா சட்டச்சிக்கல்! title=

வட கொரியா: வடகொரியா என்றாலே அங்கு பிரச்சனைகளும் கட்டுப்பாடுகளும் என்ற அளவுக்கு உலகிலேயே வித்தியாசமான நாடு என்று பெயர் பெற்றுள்ளது. இப்படி பெயர் பெற்ற நாட்டில், பெயர் வைத்துக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, வடகொரிய அதிபர் கிம்மின் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள் மற்றும்  சிறுமிகள், பெயரை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கிம் ஜு ஏ என்ற பெயர் மாற்றம்

பெயர் வைக்க இப்படி ஒரு தடையா, அதுவும் அதிபரின் மகள் பெயரை வேறு யாரும் வைத்துக் கொள்ளக்கூடாதா என்று ஆச்சரியம் எழுந்தாலும், இந்த உத்தரவு இத்துடன் முடிந்துவிடவில்லை. அந்நாட்டு தலைவர்களின் பெயரை இனி வடகொரிய மக்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பெயர் மாற்றம் தொடர்பாக வடகொரியா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கிம் ஜு ஏ என்ற பெயருள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ளவேண்டும். ஒருவாரத்திற்குள் நாட்டில், வேறு யாருக்குமே கிம் ஜு ஏ என்ற பெயர் இருக்கக்கூடாது" என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 மையப்படுத்தப்பட்ட பொருளாதாரம் மற்றும் ஒற்றை கட்சி அமைப்புடன் சர்வாதிகார நாடாக விளங்கும் வட கொரியா தொடர்பான இன்னும் சில அதிர்ச்சிகரமான உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா?

மேலும் படிக்க | துருக்கியில் இனி மீட்புப்பணி இல்லை! காரணம் என்ன? இடிபாடுகளுக்குள் யாரும் இல்லையா?

வட கொரியாவைப் பற்றிய 10 அதிர்ச்சிகரமான உண்மைகள் 

வட கொரியா ஒரு சர்வாதிகாரம்: நாடு 70 ஆண்டுகளுக்கும் மேலாக கிம் குடும்பத்தால் ஆளப்பட்டது, தற்போதைய தலைவர் கிம் ஜாங்-உன் 2011 இல் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்.

வடகொரியாவில் இணைய அணுகல் பெருமளவில் தடைசெய்யப்பட்டுள்ளது: பெரும்பாலான வட கொரியர்களுக்கு இணைய அணுகல் இல்லை, மேலும் அவ்வாறு இருப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையிலான அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள இணையதளங்களை மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

வட கொரியா உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றாகும்: நாடு மற்ற நாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் அதன் குடிமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துகிறது.

நாடு பெருமளவில் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது: வட கொரியா உலகின் மிகப்பெரிய நிலையான இராணுவங்களில் ஒன்றாகும், சுமார் 1.2 மில்லியன் இராணுவ வீரர்கள் உள்ளனர்.

மேலும் படிக்க | Turkey Earthquake: அதிகரிக்கும் துருக்கி நிலநடுக்க சேதாரங்கள்! இதுவரை 15,383 பேர் பலி

அரசாங்கம் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்படுத்துகிறது: வட கொரிய அரசாங்கம் நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது, மேலும் குடிமக்கள் வெளிநாட்டு செய்தி ஆதாரங்களை அணுக அனுமதிக்கப்படுவதில்லை.

மனித உரிமை மீறல்கள் பரவலாக உள்ளன: அரசியல் சிறை முகாம்கள், கட்டாய உழைப்பு, சித்திரவதை மற்றும் பேச்சு மற்றும் மத சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பரவலான துஷ்பிரயோகங்களை மனித உரிமை குழுக்கள் தெரிவிக்கின்றன.

வட கொரியா உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும்: நாட்டில் ஒரு மையமாக திட்டமிடப்பட்ட பொருளாதாரம் மற்றும் வரையறுக்கப்பட்ட வர்த்தகம் உள்ளது, இதனால் நாட்டில் வறுமையில் வாடும் மகக்ள் அதிகமாக உள்ளனர்.

அரசாங்கம் வெளிநாட்டு பயணத்தை பெரிதும் கட்டுப்படுத்துகிறது: வட கொரியர்கள் அரசாங்க அனுமதியின்றி வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை, வடகொரியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கண்காணிக்கப்பட்டு அவர்களின் நடமாட்டங்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

வட கொரியா அணு ஆயுதத் திட்டத்தைக் கொண்டுள்ளது: நாடு பல அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. அதன் விளைவாக பல்வேறு சர்வதேச தடைகளை எதிர்கொண்டுள்ளது.

வெளிநாட்டு உதவியை பெரிதும் நம்பியுள்ள வடகொரியாவில் மில்லியன் கணக்கான மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிற சுகாதார பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு உணவளிக்க வெளிநாட்டு உதவியை பெரிதும் நம்பியுள்ளது.

மேலும் படிக்க | Coronavirus: சீனாவில் களியாட்டம் போடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஜப்பான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News