பாகிஸ்தானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்தது

Last Updated : Dec 8, 2016, 01:30 PM IST
பாகிஸ்தானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்தது title=

பாகிஸ்தானில் 47 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்தது.  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானம் PK-661 என்ற பயணிகள் விமானம் சென்றுக் கொண்டிருந்தது. அபோதாபாத் என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடன் தனது தொடர்பை இழந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அவசர எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது - 0092-21-99044890, 0092-21-99044376 மற்றும் 0092-21-99044394.

Trending News