பிரதமர் இம்ரான் கான் இந்தியாவை கண்டு அஞ்சுகிறார்: பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துவது குறித்த பிரதமர் இம்ரான் கான் பேசியதற்கு பாகிஸ்தானில் எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 24, 2021, 04:26 PM IST
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல்கள் நடந்து வருகின்றன.
  • காஷ்மீரில் வாக்கெடுப்பு பற்றிய பேச்சு காரணமாக இந்தியா குறித்த இம்ரான் கானின் அச்சம் அம்பலமாகியுள்ளது
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் பேரணியின் போது அங்குள்ள மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதியளித்தார்.
பிரதமர் இம்ரான் கான் இந்தியாவை கண்டு அஞ்சுகிறார்: பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் title=

பாகிஸ்தான் (Pakistan) பிரதமர் இம்ரான் கான் அளித்த அறிக்கை  தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துவது குறித்த பிரதமர் இம்ரான் கான் பேசியதற்கு பாகிஸ்தானில் எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தானின் நிலைப்பாட்டில், மாற்றம் கூடாது எனவும் அவர்களால் அதை மாற்ற முடியாது எனக் கூறியுள்ளார்.

பிரதமர் இம்ரானின்  (Imran Khan) காஷ்மீர் வாக்கெடுப்பு யோசனையை ஷெபாஸ் ஷெரீப் நிராகரித்தார். ஜியோ நியூஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, பி.எம்.எல்-என் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான யோசனையை திட்டவட்டமாக நிராகரித்தார். பிரதமர் இம்ரான் கான் விரும்பினாலும் இதைச் செய்ய முடியாது என்று அவர் கூறினார். பாகிஸ்தானின் நிலைப்பாடு மாறப்போவதில்லை என அவர் கூறினார். காஷ்மீரில் வாக்கெடுப்பு பற்றிய பேச்சு காரணமாக இந்தியா குறித்த இம்ரான் கானின் அச்சம் அம்பலமாகியுள்ளது என்று பி.எம்.எல்-என் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்தார். 
  
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்  தேர்தல் பேரணியின் போது அங்குள்ள மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதியளித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள், பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமா அல்லது தனி நாடாக வேண்டுமா என்பதை வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்து கொள்ளலாம் எனப் பிரதமர் இம்ரான் கான்  கூறியிருந்தார்.

ALSO READ | Dubai: 'பிளாக் டயமண்ட்' ஐஸ்கிரீம் விலை ₹60,000; அப்படி என்ன தான் இருக்கு..!!

இதை கடுமையாக எதிர்த்த ஷெபாஸ் ஷெரீப், காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வரலாற்று ரீதியாகவும்,  அரசியலமைப்பின் படியும் நிலைப்பாடு உள்ளது என்று ஷெபாஸ் ஷெரீப் கூறினார். பிரதமர் இம்ரான் கான் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் (UN) தலையீட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட முடியும் என்றார். 

தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல்கள் நடந்து வருகின்றன. பிரதமர் இம்ரான் கான், தாரார் கேலில் நடந்த தேர்தல் பேரணியில் பேரணியில் உரையாற்றியபோது, ​​காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து பேசினார்

ஆகஸ்ட் 5, 2019 அன்று எடுக்கப்பட்ட இந்தியாவின் நடவடிக்கை குறித்து இம்ரான் கான் இன்னும் அச்சத்தில் இருக்கிறார். ஆகஸ்ட் 5, 2019 அன்று இந்தியா ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்து 370 வது பிரிவை ரத்து செய்தது அனைவரும் அறிந்ததே. 

ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News