பற்றி எரியும் பாகிஸ்தான்; பிரான்ஸ் குடிமக்கள் உடனே வெளியேற பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தல்

பிரான்ஸில், கடந்த ஆண்டு அக்டோபர் 16 அன்று, நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில்,  நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், தலை வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 16, 2021, 02:07 PM IST
  • நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், தலை வெட்டி கொலை செய்யப்பட்டார்.
  • மதரஸாக்கள் உள்ளிட்ட பல பிரிவினைவாத அமைப்புகளுக்கு தடை விதித்து பிரான்ஸில் சட்டம் இயற்றப்பட்டது.
  • பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக் இ லப்பைக் தொண்டர்கள், நாடு தழுவிய அளவில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்
பற்றி எரியும் பாகிஸ்தான்; பிரான்ஸ் குடிமக்கள் உடனே வெளியேற  பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தல்

பிரான்ஸில், கடந்த ஆண்டு அக்டோபர் 16 அன்று, நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில்,  நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், தலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இது பிரான்ஸில் (France) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை எதிர்க்கும் வகையில்,  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (French President Emmanuel Macron) முகம்மது நபியின் சர்ச்சைக்குரிய கார்டூனை, அரசி கட்டிடங்களில் பிரம்மாண்டமாக திரையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை அடுத்து, மதரஸாக்கள் உள்ளிட்ட பல பிரிவினைவாத அமைப்புகளுக்கு தடை விதித்து பிரான்ஸில் சட்டம் இயற்றப்பட்டது. 

இந்நிலையில், அண்மையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முகமது நபியை சித்தரிக்கும் கார்டூன்களை மீண்டும் வெளியிடுவதற்கு, ஒரு பத்திரிக்கைக்கு மீண்டும் ஒப்புதல் அளித்தார்.

ALSO READ | பிரான்சில் வகுப்பில் நபிகள் நாயகத்தின் கார்டூனை காண்பித்த ஆசிரியர் தலை வெட்டி கொலை ..!!!

இது கடவுள் நிந்தனை என்று பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக் இ லப்பைக் (Tehreek-e-Labaik Pakistan) என்ற கட்சியின்  தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். அக்கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், வீதியில் இறங்கி, பாகிஸ்தானில் நாடு தழுவிய அளவில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதை அடுத்து, ஒரே வார காலமாகவே, பாகிஸ்தானில், வன்முறை போரட்டங்கள் தீவிரமடைந்து, நாடே பற்றி எறிகிறது. 

பாகிஸ்தானில் (Pakistan) பிரெஞ்சு மக்களுக்கு எதிரான வன்முறை போராட்டம் தீவிரமடைந்து உள்ளதால்,  பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் உடனடியாக பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் மக்களுக்கு எதிரான போராட்டத்தை ட்விட்டரிலும் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் போராட்டக்காரர்கள் #FrenchLeavePakistan என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சேக் ரஷீத் அகமது, முகமது நபியின் நன்மதிப்பை பாதுகாக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இந்த வன்முறை போராட்டங்கள் பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத தேசமாக சர்வதேச சமூகத்தின் முன் எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ | Islamophobia: ஒரே பதிலில் பாகிஸ்தானின் வாயை அடைத்த பிரான்ஸ் அதிபர்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News