ரிபுதமன் சிங் மாலிக்: 1985 ஏர் இந்தியா விமான தாக்குதல் வழக்கு சந்தேக நபர் படுகொலை

Ripudaman Singh Malik shot dead in Canada: ஏர் இந்தியா விமான வெடிகுண்டு தாக்குதல் குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட ரிபுதமன் சிங் மாலிக் கனடாவில் சுட்டுக் கொலை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 15, 2022, 09:26 AM IST
  • 1985 ஏர் இந்தியா விமான தாக்குதல் வழக்கு சந்தேக நபர் படுகொலை
  • ஏர் இந்தியா விமானம் 182 குண்டுவெடிப்பில் 329 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்
  • சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளராக இருந்த ரிபுதமன் சிங் மாலிக் படுகொலை
ரிபுதமன் சிங் மாலிக்: 1985 ஏர் இந்தியா விமான தாக்குதல் வழக்கு சந்தேக நபர் படுகொலை   title=

புதுடெல்லி: 1985 ஆம் ஆண்டில்,  ஏர் இந்தியா விமானம் 182 வெடிகுண்டு தாக்குதலில்  329 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் அயர்லாந்து கடற்கரையில் நடைபெற்றது. 

அந்த வெடிகுண்டு தாக்குதலில் ரிபுதமன் சிங் மாலிக் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் வழக்கு விசாரணையின்போது, ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

வான்கூவரில் தொழில் செய்துவந்த ரிபுதமன் சிங் மாலிக், நேற்று (2022 ஜூலை 14)  கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் படிக்க | Google Pay, PhonePe பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை! UPI-ல் நடக்கும் மோசடி!

வான்கூவரில் உள்ள கல்சா கிரெடிட் யூனியனின் (Khalsa Credit Union) நிறுவனர் ரிபுதமன் சிங் மாலிக் தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​துப்பாக்கியால் சுடப்பட்டார்.  

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் பகுதியில் ஆடை வணிகம் செய்துக் கொண்டிருந்த சீக்கியர் ரிபுதமன் சிங் மாலிக்தனது வணிக வளாகத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடா போலீசார் (Royal Canadian Mounted Police) சம்பவத்தை உறுதிப்படுத்திய போதிலும், பாதிக்கப்பட்டவர் தொடர்பான எந்த விவரங்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

மேலும் படிக்க | யுபிஐ மூலம் ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கலாம், கார்ட் கூட தேவையில்லை

கனடா போலீஸ் வெளியிட்ட அறிக்கையில், ஒரு நபர் "துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு பலியானார்" என்று தெரிவித்துள்ளது. 

இது இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு போல் தெரிகிறது  என்று காவல்துறையினர் தெரிவித்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. வாகனத்தில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.

தாக்குதல்தாரிகள் பயன்படுத்திய வாகனம் சில கிலோமீட்டர் தொலைவில் "முழுமையாக தீயில் எரிந்த நிலையில்" கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. 

மேலும் படிக்க | இரான் அணுஆயுத ஒப்பந்தமும் ஜோ பிடனின் சூசக எச்சரிக்கையும்

ரிபுதமன் சிங் மாலிக் யார்?

2005 ஆம் ஆண்டில், ஏர் இந்தியா விமான படுகொலை வழக்கில் ஆதாரங்கள் இல்லாததால் ரிபுதமன் விடுவிக்கப்பட்டார். அவர் ஒரு காலத்தில் சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளராகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1985 ஆம் ஆண்டில், அயர்லாந்தின் கடற்கரையில் ஏர் இந்தியா விமானம் 182 குண்டுவெடிப்பில் 329 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். வான்வழி பயங்கரவாதத்தின் கொடிய செயல்களில் இதுவும் ஒன்று.

ஜப்பானின் நரிடா விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்திலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. ஏர் இந்தியா விமானத்தில் சாமான்களை ஏற்றிக் கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் வெடிவிபத்தில் உயிரிழந்தனர். அந்த இரண்டு சூட்கேஸ்களும் வான்கூவரில் இருந்து வந்தவை என தெரியவந்தது.

மேலும் படிக்க | UPI பேமெண்ட் மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News