உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்; 18 பேர் பலி

உக்ரைன் வணிக வளாகத்தின் மீது  ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர்; 36 பேர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 29, 2022, 01:59 PM IST
  • மத்திய நகரமான கிரெமென்சுக்கில் நடந்த இந்த தாக்குதலுக்கு உலக அளவில் கண்டனம் வலுத்து வருகிறது.
  • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இதை "போர் குற்றம்" என்று அழைத்தார்.
  • இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி மேற்கொண்டு வருவதாக அரசு அதிகாரிகள் கூறினர்.
உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்; 18 பேர் பலி title=

உக்ரைன் வணிக வளாகத்தின் மீது  ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர்; 36 பேர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய நகரமான கிரெமென்சுக்கில் நடந்த இந்த  தாக்குதலுக்கு உலக அளவில் கண்டனம் வலுத்து வருகிறது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இதை "போர் குற்றம்" என்று அழைத்தார்.

க்ரெமென்சுக்கில் மாஸ்கோ பொதுமக்களை வேண்டுமென்றே கொன்றதாக உக்ரைன் கூறியது. எனினும் ரஷ்யா இது குறித்து கூறுகையில், அருகிலுள்ள ஆயுதக் கிடங்கைத் தாக்கியதாகவும், மால் காலியாக இருப்பதாகவும் கூறியது. பிராந்தியத்தின் முக்கிய நகரமான டினிப்ரோவிலும் ஏவுகணை தாக்குதலால் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி மேற்கொண்டு வருவதாக அரசு அதிகாரிகள் கூறினர்.

ரஷ்யா ஆறு ஏவுகணைகளை வீசியதாகவும், அவற்றில் மூன்று சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும், தாக்குதலில்  ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் ஒரு தொழில் நிறுவனம் அழிக்கப்பட்டதோடு, ஒரு சேவை நிறுவனம் எரிந்து கொண்டிருந்தது என உக்ரைன் அதிகாரிகள் கூறினர். 

முன்னதாக ஜெர்மனியில் நடந்த  G7 உச்சிமாநாட்டில், தொழில்மயமான ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய எண்ணெய் மீதான விலை வரம்புக்கான திட்டங்களை அறிவித்தனர். இது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை அதிகரிக்காத வண்ணம்,  ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் ஜி7 நாடுகள்

அடுத்ததாக ஸ்பெயினில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெறவுள்ளது, இதில் மேற்கத்திய இராணுவக் கூட்டமைப்பில், நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் தீவிர எச்சரிக்கை நிலையில் இருப்பதாகவும், அதன் மூலோபாய கட்டமைப்பை மாற்றியமைத்து மாஸ்கோவை ஒரு எதிரி நாடாக  அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் செவ்வாயன்று துருக்கி பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோவில் இணைவதை ஆதரிக்க ஒப்புக்கொண்டதாக கூறினார்.

ரஷ்யா வணிக வளாகம் மீது நடத்திய தாக்குதலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஷாப்பிங் சென்டரின் இடிபாடுகளுக்கு எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் வரிசையாக நின்று கொண்டிருந்தனர், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள், சிலர் கண்ணீர் மல்க, மெழுகுவர்த்தி ஏற்றி, இறந்தவர்களுக்கு மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். "ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான" இது என கூறிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யா வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைத்து தாக்குவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க | மூன்றாம் உலகப் போர்? லண்டன் மீது முதலில் குண்டு வீசப்படும்

எனினும், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை சேமித்து வைத்திருந்த அருகிலுள்ள ஆயுதக் கிடங்கைத் தாக்கியதாகவும், அது வெடித்த நிலையில், இதனால் ஏற்பட்ட  தீ அருகிலுள்ள வணிக வளாகத்திற்கு  பரவியதாகக் கூறியது. மேலும், ஷாப்பிங் சென்டர் பயன்படுத்தப்படாமல் காலியாக இருப்பதாக விவரித்தது. 

G7 தலைவர்கள் தாக்குதல் "அருவருப்பானது" என்று கூறினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News