தனது காதலியை இரக்கமின்றி காட்டிகொடுத்த காதலன்; அதிர்ச்சியில் காதலி!

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தில், ஆண் மலைப்பாம்பு உதவியுடன் 17 அடி நீளம் கொண்ட பெண் மலைப்பாம்பு பிடிபட்டது!!

Last Updated : Apr 8, 2019, 06:34 PM IST
தனது காதலியை இரக்கமின்றி காட்டிகொடுத்த காதலன்; அதிர்ச்சியில் காதலி! title=

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தில், ஆண் மலைப்பாம்பு உதவியுடன் 17 அடி நீளம் கொண்ட பெண் மலைப்பாம்பு பிடிபட்டது!!

ஃப்ளோரிடா மாகாண வன உயிரியல் பாதுகாப்பு மையம் சார்பில் அம்மாகாணத்தில் வன உயிர்களைக் கொல்லும் மலைப்பாம்பைப் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமான அளவில் சிறிய மிருகங்களான முயல், மான், முதலை, பறவைகள் என ஒரு மலைப்பாம்பு பலவற்றைக் கொன்றுள்ளது.

வன உயிரினப் பாதுகாப்பு மையம் சார்பில் ஆய்வாளர்கள் இப்பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி ஆண் மலைப்பாம்பு ஒன்றின் மீது ரேடியோ அலை அனுப்பியை (radio transmitter) கட்டி வனப்பகுதியில் விடப்பட்டது. இதையடுத்து, ஆண் மலைப்பாம்பு ஒன்றில் ட்ரான்ஸ்மிட்டர் பொருத்தி பெண் மலைப்பாம்பு வரும் போது அதைப் பிடித்துள்ளனர். பிடிபட்ட பெண் மலைப்பாம்பு 73 முட்டைகள் உடன் பிடிபட்டுள்ளது.

’பர்மீஸ் பைதான்’ ரக மலைப்பாம்புகள் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்பதாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட பாம்பு 17 அடி நீளம், 140 பவுண்டு எடையும் கொண்டதாக இருந்துள்ளது. இந்த மலைப்பாம்பை பிடித்தபடி எடுக்கப்பட்ட புகைப்படத்தை வனப்பகுதியினர் முகநூளில் பதிவிட்டுள்ளார். 

 

Trending News