september 29 snippets: Top 10 இன்றைய முக்கிய உலகச் செய்திகள்; அமெரிக்கா முதல் குவைத் வரை...

அமெரிக்கா, சீனா, செளதி அரேபியா, குவைத் என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 29, 2020, 09:39 PM IST
  • குவைத்தின் அரசர் Emir Sheikh Sabah al-Ahmad al-Sabah இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன...
  • 'Vatican தனது தார்மீக அதிகாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கிறது’ என்று சீனாவுடனான உறவு தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ காட்டம்...
  • WHO: கொரோனா வைரஸ் காரணமாக ஒரு மில்லியன் இறப்புகள் என்பது 'மிகவும் சோகமான மைல்கல்'...
september 29 snippets: Top 10 இன்றைய முக்கிய உலகச் செய்திகள்; அமெரிக்கா முதல் குவைத் வரை... title=

புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, செளதி அரேபியா, குவைத் என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...

  • குவைத்தின் அரசர் எமிர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல் சபா (Emir Sheikh Sabah al-Ahmad al-Sabah) இறந்துவிட்டார் என்று அவரது அலுவலகம் செவ்வாயன்று அரசு தொலைக்காட்சியில் வாசித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • 91 வயதான அரசர் ஷேக் சபா 2006 முதல் மன்னராக இருக்கிறார். அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு கொண்ட அவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்தியுள்ளார். அரசர் ஷேக் சபா, தனது சகோதரர் இளவரசர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபாவை பட்டத்து இளவராக அறிவித்திருந்தார். குவைத்தின் புதிய அரசராக Sheikh Nawaf al-Ahmad al-Sabah பதவியேற்பார்.
  • Trump-Biden விவாத நாடகத்தை நடத்துவதற்காக சீனாவின் தலையை உருட்டவேண்டாம் என்று  பிரச்சினையை உருவாக்க வேண்டாம் என்று China daily பத்திரிகை எச்சரிக்கிறது.
  • 'Vatican தனது தார்மீக அதிகாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கிறது’ என்று  சீனாவுடனான உறவு தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ காட்டம்... 
  • WHO: கொரோனா வைரஸ் காரணமாக ஒரு மில்லியன் இறப்புகள் என்பது 'மிகவும் சோகமான மைல்கல்'  
  • அமெரிக்கா: டெக்சாஸில் மூளை உண்ணும் அமீபாவுக்கு ஆறு வயது சிறுவன் பலி.  
  • கலிபோர்னியாவில் புகழ்பெற்ற ஒயின் பகுதிகள் காட்டுத்தீயால் அழிக்கப்பட்டன; ஆயிரக்கணக்கானோர் உயிர் தப்பி ஓடுகிறார்கள். 
  • COVID-19க்கான ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை தயாரித்த கமலேயா நிறுவனத்தின் தலைவரும், ரஷ்ய விஞ்ஞானியுமான அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க்,  'போர்க்கால' அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கிறார்.  
  • China National Day அன்று எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டங்களுக்கு ஹாங்காங் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. 
  • Jamal Khashoggi கொலை தொடர்பாக செளதி அரேபியாவைச் சேர்ந்த மேலும் ஆறு  பேர் மீது துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது. 
  • வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத திருட்டு விவகாரங்களால், ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும் 89 மில்லியன் டாலர் வீணாவதாக ஐ.நாவின் ஆய்வு ஒன்று கவலை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: இரான் புரட்சிகர காவலர் படையால் பயிற்சியளிக்கப்பட்ட பயங்கரவாத செல்லை நொறுக்கிய Saudi Arabia

Trending News