பள்ளிக்கூடங்களில் துப்பாக்கிச்சூடு : 3 பேர் பலி; 11 பேருக்கு காயம் - பதைபதைக்க வைக்கும் வீடியோ

Brazil School Shooting : பிரேசிலில் 16 வயதான சிறுவன், செமி- ஆட்டோமேட்டிக் ரக துப்பாக்கியை கொண்டு பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதன் வீடியோவும் தற்போது பரவாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 26, 2022, 09:35 AM IST
பள்ளிக்கூடங்களில் துப்பாக்கிச்சூடு : 3 பேர் பலி; 11 பேருக்கு காயம் - பதைபதைக்க வைக்கும் வீடியோ title=

Brazil School Shooting : பிரேசில் நாட்டின் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாணத்தில் அருகருகே உள்ள இரண்டு பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று (நவ. 25) துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் கையில், செமி ஆட்டோமேட்டிக் ரக துப்பாக்கியை வைத்திருந்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

தொடர்ந்து, அந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ராணுவ உடையில், முகத்தை மறைத்து இருந்துள்ளார். மேலும், அந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில், 2 ஆசிரியர்கள், 1 மாணவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 11 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாணத்தின் தலைநகரான விட்டோரியாவில் இருந்து வடக்கே 50 மைல் தொலைவில் உள்ள அராக்ரூஸ் என்ற சிறிய நகரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. 

மேலும் படிக்க | நாஜி பாணியில் பாலியல் வன்புணர்வு செய்யும் வீடுகளில் வெள்ளைக்கொடி - ரஷ்யா அட்டூழியம்

எஸ்பிரிடோ சாண்டோவின் ஆளுநர் ரெனாடோ காசாக்ராண்டே ட்விட்டரில்,"அராக்ரூஸில் இரண்டு பள்ளிகளைில் தாக்குதலை பாதுகாப்புக் குழுக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்கு துக்கத்தின் அடையாளமாக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். தாக்குதலுக்கான காரணங்களை விசாரித்து விரைவில் மேற்கொண்டு தகவல்களை அளிக்கிறோம். Primo Bitti, Praia de Coqueiral ஆகிய இரண்டு பள்ளிகளில் தாக்குதல்கள் நடந்துள்ளது" என்றார். 

இத்தாக்குதல் சம்பவம் குறித்து பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா,"எஸ்பிரிடோ சாண்டோவில் உள்ள அராக்ரூஸ் பள்ளிகளில் நடந்த தாக்குதல்கள் குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது, அது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவிக்கிறேன். 

இந்த வழக்கை விசாரிப்பதிலும், பாதிக்கப்பட்ட இரண்டு பள்ளிகளைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஆறுதல் அளிப்பதிலும் ஆளுநர் கசக்ராண்டேவுக்கு எனது ஆதரவக்கரத்தை நீட்டுகிறேன்," என்று கூறியுள்ளார். இச்சம்பவத்தின் வீடியோக்களும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | வீங்கிய விரல்கள்... நடுங்கும் கால்கள்... புடின் உடல் நிலை குறித்த பகீர் தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News