பாம்பு நிபுணரை கடித்துக் கொன்ற பாம்பு: இரண்டாவது பாம்புக்கடி உயிருக்கு ஆபத்து

Rattlesnake Bite: பாம்புக் கடியால் இறந்த உலக புகழ்பெற்ற பாம்பு நிபுணர் பாம்புகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதற்காக வாழ்நாள் முழுவதும் பாம்புகளுடனே பயணித்தவர்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 14, 2022, 06:18 AM IST
  • வாழ்நாள் முழுவதும் பாம்புகளுடனே வாழ்நதவர்
  • பாம்பு நிபுணரை கடித்துக் கொன்ற பாம்பு
  • இரண்டாவது பாம்புக்கடி உயிருக்கு ஆபத்து
பாம்பு நிபுணரை கடித்துக் கொன்ற பாம்பு: இரண்டாவது பாம்புக்கடி உயிருக்கு ஆபத்து title=

வடக்கு வர்ஜீனியாவில் உள்ள புல் ரன் மலைகள் காப்பகத்தில் (Bull Run Mountains Natural Area) பாம்புகளை கணக்கெடுக்கும் பணியில் இருந்த  மார்ட்டின் பாம்பு கடித்து இறந்து போனார். தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் பாம்புகளின் எண்ணிக்கையை பதிவு செய்வதற்கும் கணக்கிடுவதற்கும் கடுமையான மலைப் பயணங்களை மேற்கொண்ட மார்ட்டின் உலக புகழ்பெற்ற பாம்பு நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்நாள் முழுவதையும் பாம்புகளுக்காகவே செலவழித்த அவரின் மரணமும் பாம்பு கடித்ததால் தான் ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

டிம்பர் ரேட்லர் என்று அறியப்படும் பாம்பு கடித்ததால் மார்டின் இறந்துபோனதாக, மார்ட்டினின் மனைவி ஜோ வில்லரி தெரிவித்தார். மேற்கு வர்ஜீனியாவில் உள்ள ஹார்பர்ஸ் ஃபெர்ரியில் உள்ள தங்களுடைய பண்ணை இருந்தபோது, ஆகஸ்ட் 3ம் தேதியன்று பாம்பு கடித்ததில் இறந்து போனதாக தெரிகிறது.

மேலும் படிக்க | உளவுச் சட்டத்தில் டொனால்ட் டிரம்ப் மீது நடவடிக்கை பாயுமா?

மார்டின் ஆசையுடன் வளர்த்து வந்த பாம்பு கடித்ததால் மரணம் ஏற்பட்டதாகவும், பாம்பு நிபுணரின் வயது 80 என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ட்டினுக்கு வயது 80 ஆகியிருந்தாலும், அவர் நல்ல உடல் தகுதியுடன் இருந்தார். அவருடைய வேகத்திற்கு ஈடு கொடுத்து நடப்பது என்பது கடினமானது என்று மார்ட்டினின் மனைவி ஜோ வில்லரி தெரிவிக்கிறார். 

பாம்புகள் வாழும் தொலைதூர மலைக் குகைகளுக்கு நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்ட மார்ட்டினுடன் அடிக்கடி மனைவியும் செல்வாராம். மார்ட்டினை 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிந்த வட கரோலினாவின் ஸ்டோக்ஸ்டேலைச் சேர்ந்த பாம்பு ஆராய்ச்சியாளரான ஜான் சீலி, மார்ட்டின் சிறுவயதில் இருந்தே ஆய்வு செய்த டிம்பர் ராட்லர் வகை பாம்பாலேயே மரணித்திருப்பது கவலையளிப்பதாக தெரிவித்தார்.

பாம்பு நிபுணர் மார்ட்டின் சிறு வயதில் இருந்தே புல் ரன் மலைகள் காப்பகத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் அங்குள்ள பாம்புகளின் எண்ணிக்கையை கண்டறிவதில் மிகவும்முக்கியமான பங்களித்துள்ளார். 

மேலும் படிக்க | தொடர்ந்து ஓடும் ராஜபக்ச! சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சமடைந்தார்

மார்ட்டின் தனது களப்பணி, ஆராய்ச்சி மற்றும் உயிரினங்களைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தும் திறமைக்காக பாம்பு நிபுணர்களிடையே நன்கு அறியப்பட்டவர்.

அமெரிக்காவில் ஆண்டுக்கு ஐந்து பாம்புக்கடிகள் தொடர்பான இறப்புகள் மட்டுமே இருப்பதாக நோய் கட்டுப்பாட்டு மையங்கள் மதிப்பிடுகின்றன. மினசோட்டா பல்கலைக்கழகத்தின் நச்சுயியல் பேராசிரியரும் பாம்புக்கடி குறித்த நிபுணருமான டான் கீலர் கருத்துப்படி, சிலருக்கு முதல் பாம்புக்கடியை விட இரண்டாவது பாம்புக்கடி மிகவும் ஆபத்தானது.

ராட்டில்ஸ்னேக்ஸ் எனப்படும் பாம்பு வகை, அளவில் பெரியதாக இருந்தால் மிகவும் ஆபத்தானவை. இந்த வகை பாம்பு கடித்த ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பானது அவரது வயதைப் பொறுத்து ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பும் மார்ட்டினுக்கு பாம்பு கடித்திருந்தாலும் இந்த முறை பாம்புக் கடி அவரது உயிரை பறித்துவிட்டது.

மேலும் படிக்க | உயிருக்கு போராடும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News