டொனால்ட் ட்ரம்ப் உளவு சட்டத்தை மீறியதாகவும் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதும் இன்றைய தலைப்புச் செய்திகளாகி அனைவராலும் விவாதிக்கப்படும் உலகச்செய்தியாகிவிட்டது. டொனால்ட் டிரம்ப் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்திய எஃப்.பி.ஐ, பல ரகசிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) ஒரு நீதிபதியால் சீல் செய்யப்பட்ட வாரண்ட் மற்றும் தொடர்புடைய பொருட்கள், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டொனால்ட் டிரம்பின் புளோரிடா எஸ்டேட்டில் நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்டது.
டொனால்ட் டிரம்ப் உளவு சட்டத்தை மீறியதாக நம்புவதற்கு சாத்தியமான காரணம் இருப்பதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
Florida judge unseals the search warrant used in former US President Donald Trump's home raid.
'Top secret' documents seized during the raid. Trump probe involves potential violations of Espionage Act, reports AFP News Agency quoting FBI
— ANI (@ANI) August 12, 2022
புளோரிடாவின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் இந்த வார தொடக்கத்தில் பாம் பீச்சில் உள்ள ட்ரம்பின் மார்-ஏ-லாகோ ரிசார்ட்டில் சோதனையைத் தொடங்கியது.
மேலும் படிக்க | உயிருக்கு போராடும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி
இந்தச் சோதனையின்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதை ட்ரம்பின் வழக்கறிஞர் கிறிஸ்டினா என்பிசி நியூஸிடம் ஒப்புக்கொண்டார். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க உளவு சட்டத்தை மீறினாரா என்பதற்கான சாட்சிகள் கிடைத்திருப்பதாக நம்பப்படுகிறது.
அமெரிக்கச் சட்டப்படி அதிபராக இருந்தவர்கள் பதவிக் காலத்தில் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அமெரிக்க அதிபர் சில முக்கிய ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றது.
டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக இருந்தபோது, ரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதாக எஃப்.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.எஃப்.பி.ஐ தனது வீட்டில் சோதனை நடத்தியதை ஆகஸ்ட் 8 அன்று டிரம்ப் தெரிவித்தார்.
2021 ஜனவரி மாதம், பதவியில் இருந்து விலகிய அந்நாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து சில ஆவணங்களை எடுத்துச் சென்று, அவற்றை தன்னிடமே வைத்துக் கொண்டதாக கூறப்படுகிரது. குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் அதிபர் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.
நேஷனல் ஆர்க்கிவ்ஸ் அண்ட் ரெக்கார்ட்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாரா) இந்த ஆண்டின் தொடக்கத்தில் மார்-எ-லாகோவில் உள்ள முன்னாள் அதிபர் டிரம்பின் இடத்தில் இருந்து ஆவணங்களின் 15 பெட்டிகளை மீட்டது.
தேடுதல் வேட்டையில் கைப்பற்றப்பட்டவை
20க்கும் மேற்பட்ட பெட்டிகள், புகைப்படங்களின் பைண்டர்கள், கையால் எழுதப்பட்ட குறிப்பு மற்றும் ட்ரம்பின் கூட்டாளியும் நீண்டகால ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனுக்கு வழங்கப்பட்ட கருணை மானியம் உட்பட 30 க்கும் மேற்பட்ட பொருட்களை எஃப்.பி.ஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக விசாரணை முகமை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | தொடர்ந்து ஓடும் ராஜபக்ச! சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சமடைந்தார்
அமெரிக்காவில் "டாப் சீக்ரெட்" ஆவணங்கள் என்பது அதிஉயர் பாதுகாப்பு ஆவணங்கள் ஆகும். நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படும் பாதுகாப்பு தகவல்கள் தொடர்பான ஆவணங்கள் இந்த வகையில் வரும்.
உளவு சட்டம் என்றால் என்ன?
உளவுச் சட்டம் என்பது ஒரு கூட்டாட்சி சட்டமாகும், இது தேசிய பாதுகாப்பு தகவல்களை வைத்திருப்பதை அல்லது பரிமாற்றத்தை தடை செய்கிறது. தற்போது டொனால்ட் டிரம்புக்கான சிக்கல்கள் மேறும் இறுகுகின்றன.
மேலும் படிக்க | கொந்தளிப்பில் இலங்கை; தமிழகத்திற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ