தென்கொரிய அதிபர் பார்க் ஜியன் ஹை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தென்கொரியாவில் அதிபர் பார்க் கியுன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.
தனது தோழியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த அதிபர் பார்க் கியுன் ஹே, இவ்விவகாரத்தில் மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், அதிபர் பார்க் கியுன் ஹே-வுக்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தென்கொரியாவின் மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள் தீர்மானித்தான இன்று தீர்மானத்தின் மீது வாக்குப்பதிவு நடத்தது. இதனையடுத்து அவர் பதவி விலகினார்.
சர்வதேச அரசியலில் பெரும் திருப்பமாக அமைந்துள்ளது. தென்கொரிய அதிபர் பார்க் ஜியன் ஹை அந்நாட்டு நாடாளுமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.