இதுவரை உருவாக்கப்பட்ட ராக்கெட்களிலேயே மிக சக்திவாய்ந்த ராக்கெட்டான ஸ்டார்ஷிப்பின் முதல் சோதனைப் பயணம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்பவும், எதிர்காலத்தில் செவ்வாய் மற்றும் விண்வெளியில் உள்ள மற்ற இடங்களுக்கும் அனுப்பும் வகையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராட்சத ராக்கெட்டை ஏவும் திட்டமானது, திட்டமிடப்பட்ட நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. ராக்கெட்டின் பூஸ்டர் கட்டத்தில் அழுத்தம் பிரச்சினை காரணமாக, இந்த சோதனை ஒத்தி வைக்கப்பட்டதாக ஸ்பேஸ்எக்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்
Teams are working towards Thursday, April 20 for the first flight test of a fully integrated Starship and Super Heavy rocket → https://t.co/bG5tsCUanp pic.twitter.com/umcqhJCGai
— SpaceX (@SpaceX) April 17, 2023
ஸ்டார்ஷிப் 164-அடி உயரமுள்ள விண்கலத்தைக் கொண்டுள்ளது, இது 230-அடி உயரமுள்ள முதல்-நிலை சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட்டில், பணியாளர்கள் மற்றும் சரக்குகளை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்ட ராக்கெட்ஷிப் 394 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் ஸ்பேஸ்எக்ஸின் லட்சியத்தில் ஸ்டார்ஷிப் ராக்கெட் ஒரு மைல்கல்லாக இருக்கும். ஆனால் ஸ்பேஸ்எக்ஸ் ஒரு விண்கலத்தை ஏவுவதில் பெரும் சவால்களை எதிர்கொள்கிறது, ஆனால், அது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டால், பூமியின் மிக சக்திவாய்ந்த ராக்கெட்டாக இருக்கும் என்று உறுதியாகக் கூறமுடியும்.
ஞாயிற்றுக்கிழமை இரவு ட்விட்டரில் இது தொடர்பாக பதிவிட்ட எலோன மஸ்க், "வெற்றி என்பது எதிர்பார்க்கப்பட வேண்டியதல்ல. வாகனம் எப்படி விண்வெளிக்கு ஏறுகிறது மற்றும் பூமியில் எப்படி பறக்கும் என்பது பற்றிய முக்கியமான தரவை சிறந்த சூழ்நிலையில் வழங்கும் என்று அவர் கூறினார்.
ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப்பின் முதல் நிலை பூஸ்டரில் 33 ராப்டார் என்ஜின்களின் வெற்றிகரமான சோதனை பிப்ரவரியில் நடத்தப்பட்டது, ஆனால் ஸ்டார்ஷிப் விண்கலமும் சூப்பர் ஹெவி ராக்கெட்டும் ஒன்றாகப் பறந்ததில்லை. தற்போதைய பரிசோதனை விண்கலம் மற்றும் சூப்பர் ஹெவி ராக்கெட் இரண்டின் செயல்திறனை இணைந்து சோதனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்னதாக, திட்டமிட்டபடி அனைத்தும் நடக்கவில்லை என்றால் தாமதம் ஏற்படும் என்று எச்சரித்திருந்த ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்,. "இது மிகவும் ஆபத்தான விமானம், இது மிகவும் சிக்கலான, பிரம்மாண்டமான ராக்கெட்டின் முதல் ஏவுதல்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
"இந்த ராக்கெட் தோல்வியடைய ஒரு மில்லியன் வழிகள் உள்ளன," அவர் தெரிவித்திருந்தார். "நாங்கள் மிகவும் கவனமாக இருக்கப் போகிறோம், எங்களுக்கு சிறு கவலை அளிக்கும் எதாவது ஒரு விஷயம் இருந்தால், சோதனை ஓட்டத்தை ஒத்திவைப்போம்" என்று மஸ்க் தெரிவித்திருந்தார்.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு ஸ்டார்ஷிப் விண்கலத்தைப் பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. நாசாவின் ஆர்ட்டெமிஸ் III இன் கீழ். 1972 ஆம் ஆண்டு அப்பல்லோ திட்டம் முடிவடைந்த பிறகு மனிதர்கள் நிலவுக்கு செல்வது இதுவே முதல் முறையாக இருக்கும்..
மேலும் படிக்க | Flipkart Summer Sale: மாஸான போன்களை லேசான விலையில் வாங்கலாம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ