நேபாளத்தில் (Nepal), உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து ஜூலை 12 ஆம் தேதி அரசியலமைப்பின் 76 (5) வது பிரிவின்படி பிரதமராக நியமிக்கப்பட்ட நேபாள காங்கிரசின் 75 வயதான, பிரதமர் ஷேர் பக்தூர் தியூபா (Sher Bahadur Deuba), 275 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் ஞாயிற்றுக்கிழமை 165 வாக்குகளைப் வென்று, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். இதை அடுத்து நேபாள அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையை வெல்ல தியூபாவுக்கு மொத்தம் 136 வாக்குகள் தேவைப்பட்டன. பிரதமராக நியமிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பை வெல்ல வேண்டும் என கூறப்பட்டது இருப்பினும், அவர் பதவி ஏற்ற உடனேயே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதை அடுத்துபுதிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை, பிரதமர் டியூபா (Sher Bahadur Deuba)அடுத்த ஒன்றரை ஆண்டு பதவியில் இருப்பார் என்று நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாக்களிக்கும் பணியில் 249 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர், அவர்களில் 83 பேர் தியூபாவுக்கு எதிராக வாக்களித்தனர், ஒரு சட்டமன்ற உறுப்பினர் வாக்கு செலுத்தாமல் நடுநிலை வகித்தார்.
ALSO READ | Alcatraz Prison: உலகின் பயங்கரமான, மர்மமான சிறைச்சாலை
பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) உடனடியாக தியூபாவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து, ட்வீட் செய்துள்ளார்.
Congratulations Prime Minister @DeubaSherbdr and best wishes for a successful tenure. I look forward to working with you to further enhance our unique partnership in all sectors, and strengthen our deep-rooted people-to-people ties.
— Narendra Modi (@narendramodi) July 18, 2021
முன்னதாக ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக, பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் பரிந்துரையின் பேரில் , அதிபர் பண்டாரி, கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் 30 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் புதிய தேர்தல்கள் நடக்கும் என அறிவித்ததில் இருந்து நேபாளம் அரசியலில் நெருக்கடி நிலை ஏற்பட்டது.
மேலும், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நேபாள உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தை 7 நாட்களுக்குள் கூட்டவும், எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியூபாவை பிரதமராக நியமிக்கவும் உத்தரவிட்டது. ஷேர் பக்தூர் தியூபா ஏற்கனவே 3 முறை நேபாள பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Germany: பேரழிவை ஏற்படுத்தி வரும் வெள்ளம், பதை பதைக்க வைக்கும் புகைப்படங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR